குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் தமிழகம் முழுவதும் வரப்போகிறது – தமிழக அரசு அறிவிப்பு!!
மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு,சமையல் எண்ணெய்,சர்க்கரை மற்றும் விலையின்றி புழுங்கல்,பச்சரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 33,238 கடைகளுக்கு கூட்டுறவுத் துறை,உணவுத் துறை வாயிலாக நியாயவிலை பொருட்கள் வழங்கப்படுகிறது.நகரங்களில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரேசன் இயங்கி வருகிறது.
மேலும் கிராமப்புறங்கள் மற்றும் மலை கிராமங்களில் 1 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து ரேசன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருப்பதால் உரிய நேரத்தில் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.அதேபோல் வாங்கிய பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதால் கிராமபுறம் மற்றும் மலை கிராமங்களில் புதிதாக ரேசன் கடைகள் திறக்க வேண்டுமென்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 500க்கும் குறைவான ரேசன் அட்டைகள் இருக்கும் இடங்களில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருக்கிறார்.
மேலும் ரேசனில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு தட்டுப்பாட்டால் பொருட்கள் பெரும்பாலான ரேசன் கடைகளில் இவை இரண்டும் வழங்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் மே,ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாதவர்கள் இனி பெற்றுக் கொள்ளலாம் என்று தெருவித்திருக்கிறார்.
மேலும் இதுவரை 9,182 கடைகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள அனைத்து கடைகளிலும் விரைவில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.