நின்று போன பீரியட்ஸ் ஒரே நாளில் வர கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!
பெண்கள் பலரும் முறையற்ற மாதவிடாயால் அவதிப்பட்டு வருவர். இது உடல் பருமனாலும் ஹார்மோன் குறைபாட்டாலும் ஏற்படுகிறது. இவ்வாறு இருப்பவர்களுக்கு கருத்தரிப்பும் தாமதமாகவே ஏற்படும்.இதனை வீட்டு வைத்தியம் முறையில் எளிமையாக சரி செய்யலாம். முறையற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு நம் ஆரம்ப கட்ட காலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுதான் காரணம். குறிப்பாக மைதா பாஸ்ட் புட் போன்றவை ஒரு முக்கிய காரணம். இதனால் உடல் சூடு ஏற்பட்டு மாதவிடாயானது தள்ளிப் போக கூடும். இதனை எல்லாம் தவிர்க்க நாம் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அதிக அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடல் சூட்டை குறைப்பதுடன் கர்ப்பப்பைக்கு மிகுந்த நல்லது.
தேவையான பொருட்கள்:
கரிய போலம் 3கிராம்
கருஞ்சீரகம் 5 கிராம்
முருங்கைக்கீரை 10 கிராம்
பனைவெல்லம் 10 கிராம்
கரிய போலமென்பது கற்றாழையிலிருந்து எடுக்கப்படுவது ஆகும்.
இது கர்ப்பப்பை மற்றும் உடலுக்கு மிகவும் நல்லது.
கருத்தடையை சரி செய்ய கருஞ்சீரகம் உதவும்.
செய்முறை:
படத்தில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
தண்ணீரில் எடுத்து வைத்துள்ள அளவுகளின் உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நன்றாக கொதித்ததும் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
முறையற்ற மாதவிடாய் உள்ள பெண்கள் இதனை வாரத்தில் ஒரு முறை 30 முதல் 50 மில்லி என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் மாதவிடாய் ரீதியான எந்த பிரச்சனையும் ஏற்படாது.