என் சப்போர்ட் முழுவதும் கன்னட மக்களுக்கு தான்.. வெளியான லீக்!! ஒட்டுமொத்த அரசியலிலிருந்து வெளியேறுகிறாரா அண்ணாமலை!!
பாஜக அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை இருவருக்கிடையே சமீபத்தில் வார்த்தை போரானது முட்டி வருகிறது.இருவரும் பேட்டி என தொடங்கி சமூக வலைத்தளம் வரை மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொள்கின்றனர்.அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை அவர்கள் ஒரு பேட்டியில், திமுகவின் அடிமைதான் காங்கிரஸ் எனக் கூறியிருந்தார்.இவ்வாறு அவர் கூறியதற்கு, பல கண்டனங்கள் எழுந்தது.
அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் செல்வபெருந்தகை தற்பொழுது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, பாஜக தலைமை எப்படி சிறிதளவு கூட யோசிக்காமல் வட்டச் செயலாளராக கூட தகுதி இல்லாத அண்ணாமலையை பதவியில் உட்கார வைத்திருக்கும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பாக இருப்பது பாஜக தான்.இதனை மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் தங்களது வாக்குகால் மூலம் மிகப்பெரிய பாடத்தை பாஜகவிற்கு உணர்த்தியுள்ளனர்.
இதனை தற்போதாவது பாஜக உணர்ந்து நாகரீகமற்ற அரசியல் செய்வதை விட்டுவிட வேண்டும்.அதேபோல எனக்கு காங்கிரஸ் வரலாறு தெரியாது என அண்ணாமலை கூறியிருந்தார்.அதேபோல அண்ணாமலையும் மக்கள் முன்னிலையில் இந்து மகா சபை முதல் ஜன சங்கம் என அனைத்தை குறித்தும் வெளிப்படையாக பேச வேண்டும்.அதற்கு தயாராக உள்ளாரா , அது மட்டுமின்றி தமிழகத்தில் அவருக்கு தலைமை பதவி கொடுத்தாலும் அவரது மனநிலைப்பாடு அனைத்தும் கர்நாடக மக்கள் மீது தான் உள்ளது.
மேகதாது அணை பிரச்சனையில் கூட கன்னட மக்களுக்கு தான் உதவுவதாக தெரிவித்துள்ளார்.இதன் ஆதாரம் அனைத்தும் இருக்கிறது.இதனை நிரூபிக்கும் பட்சத்தில் அண்ணாமலை அரசியலிலிருந்து வெளியேறுவாரா என்ற கேள்வி எழுப்பினார்.மேலும் எங்களை அண்ணாமலை சீண்ட நினைத்தால் உங்களைப் பற்றிய பல ரகசியங்கள் வெளியே வரும் என்று தெரிவித்தார்.அதேபோல அண்ணாமலை கூறிய வார்த்தையில் அடிமை என்ற அதிகாரம் தான் உள்ளது. இவ்வாறு பேசுபவர்கள் ஒரு சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும்.
இங்கு அடிமை என்று யாருமில்லை, யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்று அம்பேத்கர் குறித்து அண்ணாமலை படித்ததுண்டா என கேள்வி எழுப்பினார். குறிப்பாக தங்கள் சொந்த கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற வேண்டும் என்று நாங்களெல்லாம் தங்களது உழைப்பை போடும் நிலையில், அண்ணாமலை மட்டும் தனி பாதையில் தங்கள் நிர்வாகிகள் தோற்க வேண்டுமென நினைப்பார்.இது அனைத்தும் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மேற்கொண்டு இவர் தற்பொழுது அமெரிக்க அதிபராக ஆகிவிடலாம் என்று எண்ணி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு செல்வதாக கிண்டலாக விமர்சித்தும் பேசினார்.