மதுபானம் டெட்ரா பாக்கெட் மூலம் விற்பனை.. டாஸ்மாக் நிறுவனத்தின் அதிரடி பதில்!!
மதுபானங்களை அடைத்து விற்கப்படும் பாட்டில்கள் மறுசுழற்சி மூலம் பெருமளவில் பயன்படுவதில்லை என்றும் மேற்கொண்டு இது நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறி டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி லி பானமானது அடைக்கப்பட்டு விற்கப்பட போவதாக தகவல்கள் வெளியானது.இந்த தகவல் வெளியானதும் பாமக தலைவர் ராமதாஸ் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.மேற்கொண்டு இது குறித்து அவர் கூறுகையில், இது கலாச்சார சீரழிவு ஏற்பட்டு தமிழகத்தையே குழிக்குள் தள்ளிவிடும் என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இவர் தனது கண்டனத்தை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே டாஸ்மாக் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்களை அடைக்கும் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை என்றும் இது குறித்து வரும் தகவல் வதந்தி என தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இது சம்பந்தமான எந்த ஒரு ஒப்புதலும் தமிழக அரசுக்கு அனுப்பப்படவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இவ்வாறு பரவும் செய்தி குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் தற்பொழுது வரை மேற்கொள்ளவில்லை என்றும் தனது தரப்பு கருத்தை கூறியுள்ளனர்.மற்ற குளிர்பானங்கள் டெட்ரா பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பட்சத்தில் மதுபானமும் இவ்வாறான வடிவமைப்பில் வரும் பொழுது இளைஞர்கள் அதிகப்படியானோர் இதனை குடித்து குடிக்கும் அடிமையாகி விடுவர். இது தமிழக அரசு பரிந்துரைக்கு சென்றாலும் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பல தரப்பினர் கூறி வருகின்றனர்.