தேள் கொட்டிடுச்சா? பதட்டம் வேண்டாம்.. இந்த பேஸ்டை அந்த இடத்தில் பூசுங்கள்! 

தேள் கொட்டிடுச்சா? பதட்டம் வேண்டாம்.. இந்த பேஸ்டை அந்த இடத்தில் பூசுங்கள்!

விஷ ஜந்துக்களில் ஒன்றாக தேள் நம் வீட்டில் ஈரமான இடங்களில் காணப்படக் கூடியவவை.மழை காலங்களில் வீட்டிற்குள் துணி,பொருட்கள் தேங்கி இருக்கும் இடங்களில் இவை காணப்படும்.

குறிப்பாக வீட்டு கழிவறையில் இவற்றின் நடமாட்டம் அதிகளவு இருக்கும்.நாம் கவனக் குறைவாக இருந்தோம் என்றால் நிச்சயம் அதனிடம் கொட்டு வாங்க நேரிடும்.ஒருவேளை உங்களை தேள் கொட்டிவிட்டால் அலட்சியம் கொள்ளாமல் உரிய தீர்வு காண முயலுங்கள்.

தேள் கடி அறிகுறிகள்:

*தேள் கடித்த இடத்தில் எரிச்சல்

*நடுக்கம்

*வாந்தி உணர்வு

தேவையான பொருட்கள்:-

1)அவுரி இலை
2)கறிவேப்பிலை

செய்முறை:-

கால் கப் அவுரி இலை மற்றும் 2 கொத்து கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு உரலில் போட்டு நீர் விட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.உரல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்டாக்கி கொள்ளவும்.

அவுரி இலை இல்லாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய அவுரிப் பொடியை பயன்படுத்தலாம்.இந்த பேஸ்டை தேள் கடித்த இடத்தில் பூசினால் அதன் விஷம் முறியும்.அது மட்டுமின்றி தேள் கடியால் ஏற்பட்ட அரிப்பு,எரிச்சல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)நெய்
2)இந்துப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் ஒன்றரை தேக்கரண்டி இந்துப்பு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசினால் அதன் விஷம் முறிந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)தும்பை இலை
2)மிளகு

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு தும்பை இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு உரலில் போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் 4 மிளகை சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுக்கவும்.

இந்த பேஸ்டை தேள் கடித்த இடத்தில் பூசினால் அவற்றின் விஷம் சில தினங்களில் முறிந்து விடும்.