குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு பாமாயில் வழங்குவது குறித்த முக்கிய தகவல்!!  

Photo of author

By Rupa

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு பாமாயில் வழங்குவது குறித்த முக்கிய தகவல்!!

மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாளிலிருந்து சரிவர நியாய விலை கடைகளிலிருந்து மக்களுக்கு எந்த பொருளும் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் வர தொடங்கியது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதம் வழங்க வேண்டிய பொருட்களே நிலுவையில் வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய பொருட்களும் வழங்கவில்லை.இப்படி இருந்த சூழலில் அனைத்து மக்களுக்கும் முறையான பொருட்கள் கிடைக்க வேண்டுமென ஆளும் கட்சியை குற்றம் சாட்டி அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்டது.அதில், மக்களவைத் தேர்தல் நடத்தை  விதிகள் காரணமாக பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவியது.மேற்கொண்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நிலுவையில் உள்ள அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக மே மாதம் வழங்கப்பட வேண்டிய அனைத்து பருப்பு மற்றும் பாமாயிலும் வழங்கப்பட்டு விட்டது.அதுமட்டுமின்றி தற்பொழுது ஜூலை மாதத்திற்கான பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதுவும் அறியாமல் இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்துகிறார்.அதுமட்டுமின்றி அவர் ஆட்சியில் இருந்த பொழுது இதே போல துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படாமல் இருந்ததை அறிய வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.