சுக்குநூறாக உடையும் பொம்மை முதல்வரின் நிர்வாகம் – தலைமைக்கே பிரஷர் கொடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!!

Photo of author

By Rupa

சுக்குநூறாக உடையும் பொம்மை முதல்வரின் நிர்வாகம் – தலைமைக்கே பிரஷர் கொடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!!

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தான் இன்று தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இது முன் விரோத பழி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இடையே இருந்த கருத்து வேறுபாடானது தற்பொழுது இரு உயிர்களையும் பறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கடந்த வருடம் இதேபோல ஆற்காடு சுரேஷ் மர்ம கும்ப கும்பலால் வெட்டி வீழ்த்தப்பட்டார்.

இதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததாக ஆம்ஸ்ட்ராங்கை அனைவரும் கைகாட்டினர். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு இவர் பெயர் அடிபட்டதால் பழிவாங்கும் நோக்கில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கக்கூடும் என்று உளவுத்துறை மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் போலீசார் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இது அனைத்தும் அரசின் மெத்தனத்தையே காட்டுகிறது.நடவடிக்கை எடுத்திருந்தால் ஆம்ஸ்ட்ராங்கின் உயிர் கட்டாயம் காப்பாற்றப்பட்டிருக்கும்.அரசாங்கத்தின் மெத்தனப்போக்கினால் நேற்று மர்ம கும்பலால் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து அனைத்து கட்சிகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது சரணடைந்திருக்கும் குற்றவாளிகள் உண்மையானவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேற்கொண்டு இதில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கானது ருத்ர தாண்டவம் எடுத்துள்ள நிலையில் அரசு ஏன் இவ்வளவு அஜாகிரதையாக நடந்து கொண்டது என்று பல தரப்பிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாரை விவகாரத்திலேயே திமுக ஆட்சி செய்ய தகுதி இல்லை என்று கூறிய நிலையில் தற்பொழுது இந்த சம்பவம் பொம்மை முதல்வரின் நிர்வாக தலைமையில் தான் நடக்குமென கண்டனங்களை கூறி வருகின்றனர்.