ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வாக்கு வங்கியை கைப்பற்றும் பாமக!! தலித் ஓட்டுகளில் திடீர் மாற்றம்!! 

Photo of author

By Rupa

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வாக்கு வங்கியை கைப்பற்றும் பாமக!! தலித் ஓட்டுகளில் திடீர் மாற்றம்!!

விக்கிரவாண்டி தேர்தலானது வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது.அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில் திமுக , நாதக , பாமக என மும்முனை போட்டி நிலவி வருகிறது.அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த காரணத்தினால் இவர்களது வாக்கு வங்கி யார் பக்கம் செல்லும் என்ற பெரும் கேள்வி இருந்து வந்தது. அதற்கேற்றார் போல் நாம் தமிழர் கட்சி சீமானும் அதிமுகவிடம் நேரடியாக ஆதரவு கேட்டார்.அதேபோல பாமக வும் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படங்களை பயன்படுத்தினர்.இதனையெல்லாம் கண்டு அதிமுக தலைமை மௌனம் காத்து வந்தது.

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என புரிந்து கொண்ட பெரும்பான்மையானவர்கள் அதிமுக வாக்குகள் பாமகவிற்கு செலுத்தப்படும் என்று கூறி வந்தனர்.இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் உள்ளிட்டவைகள் திமுகவிற்கு பெரும் அடியாக அமைந்தது.மேற்கொண்டு இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென பணம் பட்டுவாடா உள்ளிட்டவைகளிலும் ஆளும் கட்சி தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இதையெல்லாம் தாண்டி தற்பொழுது பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது திமுகவிற்கு அடுத்த அடியாக உள்ளது.

உளவுத்துறை முன்கூட்டியே இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெற போகும் என்பதை கணித்தும், ஏன் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்விகளை துளைத்து கேட்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என பல சிக்கல்களில் திமுக இருக்கும் நிலையில் விக்ரவாண்டி தேர்தல் வாக்கு வங்கியில் மாற்றம் வரலாம் எனக் கூறுகின்றனர்.

அதன்படி பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் பாமக உடன் மிகுந்த பரஸ்பர உறவை கொண்டிருந்தார்.பல இடங்களில் பாமகவும் இவருக்கு ஆதரவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆளும் கட்சி மீதுள்ள அதிருப்தி காரணமாக, திமுகவிலிருக்கும் தலித் ஓட்டுகள் பாமகவிற்கு போடப்படலாம் என்று கூறுகின்றனர்.