முகப்பரு கரும்புள்ளி உடனே மறையை.. அரளிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்!!
குறிப்பிட்ட பருவத்தில் முகப்பரு பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர்.ஹார்மோன் மாற்றம்,எண்ணெய் பசை சருமம் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் உண்டாகிறது.சிலர் முகத்தில் இருக்கும் பருக்களை கைகளால் தொடுவது,அதில் இருக்கும் வெள்ளை பருக்களை அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
இதுபோன்ற செயல்கள் முகத்தில் உள்ள பருக்களை கருமையடைய செய்துவிடும்.இதனால் முக அழகு குறைந்து தன்னம்பிகையை இழக்கும் சூழல் ஏற்படும்.எனவே முகத்தில் இருக்கின்ற பருக்களை எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி இயற்கையான முறையில் அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வரவும்.
தீர்வு 01:-
1)சந்தன தூள்
2)எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தன தூள் மற்றும் ஒன்றரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும்.30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி சுத்தம் செய்து வந்தால் முகப்பரு,கரும்புள்ளி பாதிப்பு நீங்கும்.
தீர்வு 02:-
1)கற்றாழை
2)வேப்பம் பூ
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பிறகு 1/4 கைப்பிடி அளவு வேப்பம் பூவை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கற்றாழை ஜெல் மற்றும் வேப்பம் பூவை போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை முகம் முழுவதும் பூசி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி சுத்தம் செய்து வந்தால் முகப்பரு,கரும்புள்ளி பாதிப்பு நீங்கும்.
தீர்வு 03:-
1)அரளிக்காய்
2)சந்தன தூள்
ஒரு அரளிக்காயை அரைத்து சிறிது சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இவ்வாறு முகத்தை பராமரித்து வந்தால் முகப்பரு,கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.