ஜாமீன் பெற கூகுள் லொகேஷன் ஷேர் செய்ய வேண்டுமா? உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பு
ஒருவர் வழக்கு விசாரணையில் இருக்கும் போது நிபந்தனை பெயரில் ஜாமீன் பெறுகிறார் என்றால் அவர் தனது சொந்த விஷேஷங்களுக்காகவோ அல்லது மருத்துவ தேவைக்காகவோ ஜாமீன் பெற்று வெளியில் செல்லும் வழக்கமிருக்கிறது.
அப்படி அவர் செல்லும் போது தொடர்ந்து காவல் துறை கண்காணிப்பில் இருக்கும் படி தன்னுடைய கூகுள் லோகேசனை ஷேர் செய்யவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன் மூலம் சம்மந்தப்பட்ட நபர் எங்கே சென்றாலும் ஜாமீன் காலம் முடியும் வரை தன்னுடைய இருப்பிடத்தை தெரிவிக்க வேண்டும்.
இது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது. மேலும் இதனால் பல இன்னல்கள் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதுகுறித்து மேல் முறையீடு செய்து பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் விளைவாக இந்த வழக்கில் தற்போது புதிய செய்தி கிடைத்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆய்வு செய்ததில் இது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர் ஜாமீன் காலத்தில் இருக்கும் பொது கூகுள் லோகேசனை பகிர தேவையில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.