நாள்பட்ட மருக்களை அடியோடு உதிர செய்யும் பவர்புல் நாட்டு வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணி பாருங்க!!
சிலருக்கு மேனியில் ஆக்காங்கே மருக்கள் இருக்கும்.இவை எந்த பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும் மேனி அழகை முழுமையாக கெடுத்துவிடும்.
உடலில் அக்குள்,இடுப்பு,தொடை,கழுத்து,முகத்தில் மருக்கள் அதிகளவில் உருவாகின்றது.இந்த மருக்களை எளிதில் உதிர வைக்க இந்த வீட்டு வைத்திய குறிப்புகள் தங்களுக்கு உதவும்.
தீர்வு 01:
1)பூண்டு பற்கள் – பத்து
2)எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
முதலில் பத்து பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் பூண்டு சாற்றை வடிகட்டி கொள்ளவும்.
அதன் பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பூண்டு சாறில் பிழிந்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இந்த சாற்றை மருக்கள் மீது அப்ளை செய்தால் ஒரே நாளில் அவை உதிர்ந்து விடும்.
தீர்வு 02:
1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
பிறகு இதை உடலிலுள்ள மருக்கள் மீது தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் அவை ஓரிரு தினங்களில் கொட்டி விடும்.
தீர்வு 03:
1)சமையல் சோடா
2)தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு இதை உடலில் இருக்கின்ற மருக்கள் மீது பூசவும்.ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் உடலில் இருக்கின்ற மருக்கள் உதிர்ந்து விடும்.
தீர்வு 04:
1)கற்றாழை
2)மஞ்சள்
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுக்கவும்.பிறகு அதை 2 அல்லது 3 முறை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் கற்றாழை ஜெல் சேர்த்து மைய்ய அரைக்கவும்.பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இந்த பேஸ்டை மருக்கள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்