இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன்.. மாணவர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் – கிரிக்கெட் வீரர் நடராஜனின் சர்ச்சை பேச்சு!!

0
202
I suffered not knowing Hindi.. Students must learn it - Cricketer Natarajan's controversial speech!!
I suffered not knowing Hindi.. Students must learn it - Cricketer Natarajan's controversial speech!!

 

இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன்.. மாணவர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் – கிரிக்கெட் வீரர் நடராஜனின் சர்ச்சை பேச்சு!!

சேலத்தில் சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் நடுத்தர வர்க்கத்திலிருந்து முன்னோக்கி அடியெடுத்து வைத்தவர் தான் நடராஜன்.இவரின் பீல்டிங் உலக அளவில் தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது. பல போட்டிகளில் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்து ஆட்டத்தையே மாற்றிய பெயரும் இவருக்கு உண்டு. இவ்வாறு இருக்கும் நடராஜன் சேலத்தில் தான் பயின்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ளார். அங்கு மாணவர்களிடம் தான் பெற்ற அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அவ்வாறு அவர் கூறிய ஒன்றுதான் தற்பொழுது சர்ச்சைக்குரிய விதமாக மாறியுள்ளது. தான் ஆரம்ப கட்ட காலத்தில் பஞ்சாப் அணியுடன் விளையாடும் பொழுது ஹிந்தி மொழி தெரியாமல் சிரமப்பட்டதாகவும் மேற்கொண்டு மாணவர்கள் அனைவரும் இதர மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இவர் கூறிய இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப அதன் மொழியானது தேவையான ஒன்றாகத்தான் அமையும். அச்சமயத்தில் அதனை கற்றுக் கொள்ள வேண்டியது என்பது கட்டாயமாக்கப்படும்.

இதற்காக ஆரம்ப கட்டத்திலிருந்து குழந்தைகளின் கல்வியில் மொழி கலாச்சாரத்தை திணிப்பதென்பது மிகவும் தவறு. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல திமுக மாணவர்கள் அணி தலைவரான ராஜீவ் காந்தியும் அவர் கூறிய கருத்திற்கு தனது எதிர்ப்பை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், உங்களுக்கு ஹிந்தி மொழி தெரியாததால் தான் வேர்ல்ட் கப் போட்டியில் நீங்கள் தேர்வாகவில்லை போல.

அதுமட்டுமின்றி நீங்கள் எப்பவும் எங்களுக்கு தங்கராசு நடராஜன் தான், ஆனால் அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் நட்டு நட்டு தான் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார். இந்த பதிவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. மொழி குறித்து பேசிய நடராஜன் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமாற்று திறனாளின் குடும்பத்திற்கு ரூ 2000.. தமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு!!
Next articleமகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு டபுள் டமாக்க ஆப்பர்.. கூடுதல் வட்டி!! உடனே விண்ணப்பியுங்கள்!!