மனித மூளையை உண்ணும் அமீபா உடலிலிருந்தால் இந்த அறிகுறிகளெல்லாம் இருக்குமாம்!! மக்களே செக் பண்ணிக்கோங்க!!
நம் அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை உண்ணும் அமீபாவால் மூன்று பேர் உயிரிழந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.உயிரிழந்த அனைவரும் நீர் நிலைகளில் குளித்திருக்கின்றனர்.அவர்கள் குளித்த நீர் நிலைகளில் மூளை திசுக்களை அழிக்க கூடிய அமீபா இருந்துகிறது.இவை ஆறுகள்,ஏரிகள் மற்றும் ஊற்றுகளில் வாழக் கூடியது.
இந்த அமீபா நாசியின் வழியாக மனித உடலிற்குள் சென்று எளிதில் மூளையை அடைந்து கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது.தற்பொழுது கேரளாவில் இந்த நோய் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மூளையை உண்ணும் அமீபா தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும்?
1)அதிகப்படியான தலைவலி
2)குமட்டல்
3)காய்ச்சல்
4)வாந்தி
5)கடிமான கழுத்து பிடிப்பு
6)வலிப்பு
7)நடுக்கம்
8)மன குழப்பம்
9)கோமா
மூளையை உண்ணும் அமீபா எங்கெல்லாம் வாழ்கிறது?
வெப்பமான நீர் நிலைகளில் இந்த அமீபா செழித்து வளரும்.சில சமயங்களில் குடிக்கும் நீரில் கூட அமீபா வளரும்.
இந்த பாதிப்பு ஏற்பட்டால் 97% இறப்பு நிச்சயம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அமீபா தொற்றில் இருந்து காத்துக் கொள்வது எப்படி?
1)வெப்பமான நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவும்.
2)தேங்கிய மாசுபட்ட நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
3)வெது வெதுப்பான நீரை கொண்டு மூக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
4)நாசி வழியாக தான் அமீபா நுழைகிறது.எனவே மூக்கு பகுதியை சுத்தம் செய்ய குளோரின் ப்ளீச் திரவத்தை பயன்படுத்தலாம்.
5)குழந்தைகளை நீர் நிலைகளில் குளிக்க அனுமதிக்க கூடாது.