High Blood Pressure: ஒரு நிமிடத்தில் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட.. இந்த ட்ரிங்க் போதுமே!!
ஹைபரடென்ஷன் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம் பல காரணங்களால் ஏற்படுகிறது.இந்த உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளாக சோர்வு,மயக்கம்,மூச்சு திணறல்,நெஞ்சு படபடப்பு உள்ளிட்டவைகள் சொல்லப்படுகிறது.
இந்த உயர் இரத்த அழுத்த பாதிப்பு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய்
2)தேன்
செய்முறை:-
முதலில் பத்து பெரிய நெல்லிக்காய் எடுத்து அதன் சதை பற்றை பொடியாக நறுக்கி நன்கு உலர்த்தி கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த நெல்லிக்காய் பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்தால் உயர இரத்த அழுத்தம் நொடியில் கட்டுப்படும்.நெல்லிக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை கீரை
2)சீரகம்
3)தேன்
செய்முறை:-
ஒரு கப் முருங்கை இலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
பின்னர் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு சுத்தமான காட்டன் துணி எடுத்து அதன் மேல் உருட்டி வைத்துள்ள முருங்கை விழுதை வடை போல் தட்டி காய விடவும்.3 முதல் 4 நாட்களுக்கு நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் காய வைத்த முருங்கை + சீரகத்தை போட்டு அரைத்து நன்கு பவுடராக்கி கொள்ளவும்.இந்த பவுடரை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த முருங்கை பவுடர் ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.பின்னர் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இந்த பேஸ்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.