இரவு நேர இருமல் படுத்தி எடுக்கிறதா? இதை உடனடியாக நிறுத்த எளிய வீட்டு வைத்தியம் இதோ!!

Photo of author

By Rupa

இரவு நேர இருமல் படுத்தி எடுக்கிறதா? இதை உடனடியாக நிறுத்த எளிய வீட்டு வைத்தியம் இதோ!!

இன்று பலரும் பாதிக்க்கப்படும் விஷயமாக இருமல் உள்ளது.குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கத்தை கலைக்க இடைவிடாத இருமல் ஏற்படும்.இதை வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)மிளகு – 10
2)கிராம்பு – 10
3)இஞ்சி – சின்ன துண்டு
4)தேன் – ஒரு ஸ்பூன்
5)மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்

செய்முறை:-

ஒரு கடாயில் 10 கருப்பு மிளகு மற்றும் 10 கிராம்பு சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விடவும்.

அதன் பின்னர் ஒரு சின்ன துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி ஒரு கிண்ணத்திற்கு வடித்துக் கொள்ளவும்.இந்த இஞ்சி சாற்றை இடித்து வைத்திருக்கும் கிராம்பு + மிளகு பொடியில் சேர்த்து கலந்து விடவும்.பிறகு 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டால் இரவு நேர இருமல் பிரச்சனை சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)துளசி
2)ஏலக்காய்
3)இஞ்சி
4)தேன்

செய்முறை:-

பாத்திரம் எடுத்து ஒரு கிளாஸ் நீர் ஊற்றவும்.பிறகு அதில் ஒரு ஏலக்காய்,ஒரு துண்டு இடித்த இஞ்சி,சிறிதளவு துளசி சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தங்களுக்கு போதுமான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி குடித்தால் இரவில் படுத்தி எடுக்கும் இருமலுக்கு குட் பாய் சொல்லிவிடலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பால் – 1 கிளாஸ்
2)பூண்டு – 2 பல்
3)மிளகு – 2
4)மஞ்சள் – ஒரு பின்ச்

செய்முறை:-

முதலில் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றவும்.

பின்னர் உரித்து வைத்திருக்கும் பூண்டு,இரண்டு மிளகு சேர்த்து குறைந்த தீயில் காய்ச்சவும்.அடுத்து ஒரு பின்ச் அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் இரவு நேர இருமல் கட்டுப்படும்.