மின்சாதனங்களை இப்படி யூஸ் பண்ணுங்க இனி கரண்ட் பில் பிரச்சனை இருக்காது – மின்சார வாரியம் அட்வைஸ்!!
தமிழ்நாடு எரிசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் மின் ஆய்வுத்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அதில் மின்சாதனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மின்சாதனங்களை எவ்வாறு கையாள வேண்டும்?
*கைகள் ஈரமாக இருக்கும் பொழுது மிசத்தனங்களை தொடக் கூடாது.ஈரக் கைகளுடன் ப்ளக்கை தொடக்கூடாது.
*மின்கம்பிகள்,மின் வயர்களில் ஈரத் துணிகளை காய போடுதல் கூடாது.அருந்து கிடக்கும் மின் கம்பிகளை ஒருபோதும் தொடக்கூடாது.
*மொபைல் சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.மொபைல் சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஸ்விட்ச் ஆப் செய்த நிலையில் இருக்கும் பொழுது தான் போனை எடுக்க வேண்டும்.
*மின் கம்பிகளுக்கு அருகே பட்டம் விடுவது அதன் அருகில் நிற்பது போன்ற செயல்களை தவிர்க்கவும்.
*மின் கம்பங்களுக்கு அருகே இருக்கின்ற மரங்களை தொடுத்து,அதில் ஏறுவது போன்ற செயல்களை தவிர்க்கவும்.
*அயர்ன் பாக்ஸ் வயரை ஈரக் கைகளால் தொடுவதை தவிர்க்கவும்.நீங்கள் பயன்படுத்தும் மின் சாதனங்களின் வயர்கள் சேதமடைந்து இருந்தால் அதை முறையாக சரி செய்த பின்னர் உபயோகிக்க வேண்டும்.
*மின்சாதனங்களை தண்ணீர் இருக்கும் இடத்தில் வைக்கக் கூடாது.சுவிட்ச் அணைத்த பின்னர் பிளாக்கினில் சார்ஜரை இணைக்க வேண்டும்.
*மின் வேலிகள்,டவர் கம்பங்களை தொடக் கூடாது.டவர் கம்பங்களுக்கு அருகே செல்பேன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.