எப்பவும் சோம்பலாகவே உள்ளதா? இதில் இருந்து மீள துளசி இலையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!
உடல் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக இருக்க இந்த ஆரோக்கிய வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)துளசி இலைகள்
2)தண்ணீர்
3)தேன்
செய்முறை:-
பத்து துளசி இலைகளை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.அதன் பின்னர் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து குடித்து வந்தால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
தேவையான பொருட்கள்:-
1)உலர் அத்திப்பழம்
2)தேன்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 உலர் அத்திப்பழங்களை போட்டு 2 தேக்கரண்டி தேன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.பிறகு இதை சாப்பிட்டு வந்தால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)காபி தூள்
2)தண்ணீர்
3)நாட்டு சர்க்கரை
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/2 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி அருந்தினால் சோம்பல் நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)மிளகு
2)வெல்லம்
3)நெய்
இரண்டு தேக்கரண்டி மிளகை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஆறவிட்டு பொடியாக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதில் 30 கிராம் வெல்லம் சேர்த்து பாகு பதத்திற்கு கொதிக்க விடவும்.
அதன் பின்னர் பொடித்து வைத்திருக்கும் மிளகுத் தூளை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.இடை இடையே சிறிதளவு நெய் சேர்த்து கிளறி கொண்டே இருந்தால் லேகியம் கிடைத்து விடும்.
இந்த லேகியத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்க முடியும்.