தும்மல் சரியாக வேண்டுமா? பாலுடன் இதை கலந்து குடிங்க!
தும்மல் என்பது தூசி அதிகமாக இருக்கும் சமயத்தில் தும்மல் நிறுத்த பாலுடன் ஒரு சில பொருட்களை கலந்து குடித்தால் தும்மல் நின்று விடும். அது என்னென்ன பொருட்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
இயற்கையான காற்றை தவிர நம்முடைய மூக்கினுள் வேறு எதாவது சென்றால் தும்மல் ஏற்படுகின்றது. தும்மல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தூசு துகள்கள் தான். மேலும் வீட்டில் இருக்கும் ஒட்டடை, கொசுவத்தி சுருளின் புகைகள், பருத்தியில் இருக்கும் தூசு இவற்றின் மூலமாகவும் தும்மல் ஏற்படும். மேலும் அதிகமாக பனி இருக்கும் பொழுதும் தும்மல் ஏற்படும். இந்த தும்மலை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* பால்
* தூதுவளை
* தேன்
செய்முறை…
பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் காய வைத்து அரைத்து வைத்துள்ள தூதுவளை பொடியை பாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் தேன் சேர்த்து கலந்து விட்டு கொள்ள வேண்டும். பின்னர் குடிக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் தொடர்ச்சியாக ஏற்படும் தும்மல் வரை சரியாகி விடும்.