பித்தப்பையில் இருக்கின்ற கற்கள் ஐஸ்கட்டி போல் கரைய.. இந்த 7 சிறந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்!!
தற்போதைய காலத்தில் பித்தப்பை கல் பாதிப்பை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.பித்தப்பையில் இருக்கின்ற கற்கள் சிறியதாக இருக்கும் பொழுதே அதை கரைத்து விடுவது நல்லது.
ஆனால் பலர் ஆரம்ப கால அறிகுறிகளை அலட்சியம் செய்து விடுகின்றனர்.இதனால் அவர்கள் பித்தப்பையில் இருக்கின்ற கற்கள் பெரியதாகி தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.
பித்தப்பையில் இருக்கின்ற கற்களை கரைக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்:
*கீழாநெல்லி கீரை பொடி
ஒரு கிளாஸ் நீரை சூடாக்கி ஒரு தேக்கரண்டி கீழாநெல்லி கீரை பொடி சேர்த்து பருகி வந்தால் பித்தப்பையில் இருக்கின்ற கற்கள் எளிதில் கரைந்துவிடும்.
*நெருஞ்சில் இலை பொடி
ஒரு பாத்திரத்தில் 150 மில்லி பால் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி நெருஞ்சில் இலை பொடி சேர்த்து கலக்கி பருகி வந்தால் பித்தப்பையில் இருக்கின்ற கற்கள் கரைந்துவிடும்.
*எலுமிச்சை சாறு
*ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் எளிதில் நீங்கிவிடும்.
*மஞ்சள்
*தேன்
ஒரு பாத்திரத்தில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து 30 நாட்களுக்கு அருந்தி வந்தால் பித்தப்பையில் இருக்கின்ற கற்கள் முழுமையாக கரைந்துவிடும்.
*ஆப்பிள்
ஒரு ஆப்பிளை தோல் மற்றும் விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக அருந்தி வந்தால் பித்தப்பை கற்கள் நீங்கிவிடும்.
*எலுமிச்சை சாறு
*தேன்
ஒரு கிளாஸ் வெதுவெதுபான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் நீங்கிவிடும்.
*தேங்காய் எண்ணெய்
*அப்பிள் துண்டுகள்
*எலுமிச்சை சாறு
*இஞ்சி துண்டு
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ஆப்பிள் துண்டுகள்,ஒரு துண்டு இஞ்சி,ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1/4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய அரைத்து வடிகட்டி கொள்ளவும்.இந்த ஜூஸை பருகி வந்தால் பித்தப்பை கற்கள் நீங்கிவிடும்.