இழந்த ஆண்மையை மீட்டெடுக்க உதவும் மூலிகை கஞ்சி!! தினமும் ஒரு கப் குடித்தாலே போதும்!
இன்றைய காலத்தில் அதிக மன அழுத்தம்,உடல் சோர்வு போன்ற காரணங்களால் ஆண்கள் ஆண்மை குறைபாட்டை சந்தித்து வருகின்றனர்.இதனால் தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்படுகிறது.இந்த பிரச்சனையில் இருந்து மீள இந்த கஞ்சியை தினமும் குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கொள்ளு பருப்பு – 3 தேக்கரண்டி
2)சீரகம் – 1/2 தேக்கரண்டி
3)மிளகுத் தூள் – 1/4 தேக்கரண்டி
4)பூண்டு பற்கள் – இரண்டு
5)உப்பு – சிறிதளவு
6)கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 3 தேக்கரண்டி கொள்ளு பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.பிறகு இதை வேறொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும்5 மிளகை வாணலியில் போட்டு வறுத்து ஆறவிடவும்.பிறகு கொள்ளு,சீரகம் மற்றும் மிளகை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தூள் செய்து கொள்ளவும்.
பின்னர் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கொள்ளு பொடி மற்றும் இடித்த பூண்டு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.அதன் பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதை தொடர்ந்து கரைத்து வைத்துள்ள கொள்ளுப் பொடி சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
கொள்ளு கஞ்சி நன்கு கொதித்து வந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் வாசனைக்காக சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும்.இந்த கஞ்சியை ஆறவிட்டு குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை பிசின் – ஒரு தேக்கரண்டி
2)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி
3)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி
4)முருங்கை பருப்பு – ஒரு தேக்கரண்டி
5)வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி முருங்கை பிசின்,ஒரு தேக்கரண்டி பாதாம் பிசின்,ஒரு தேக்கரண்டி முருங்கை பருப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
இந்த தேங்காய் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அரைத்த பேஸ்டை சேர்த்து ஒரு கொதிவிட்டு பருகி வந்தால் இழந்த ஆண்மையை மீட்டெடுக்கலாம்.