துணை முதல்வராக உதயநிதி நியமனம்.. ஸ்டாலின் முடிவு!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 25 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் வரும் என கூறியிருந்தனர். அதேபோல மத்தியில் திமுக அமைச்சர்கள் பலரை அமலாக்கத்துறை மற்றும் வருமானத்துறை குறி வைத்து இருப்பதாகவும் இதனால் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனுடன் துணை முதல்வராக உதயநிதி நியமிக்க பட வேண்டும் என்ற திட்டத்தையும் கையில் வைத்துள்ளதாகவும் கூறினர். உதயநிதி துணை முதல்வராக நியமனம் செய்யப்படுவார் என்ற வெளிப்பாட்டை பல அமைச்சர்கள் தங்களின் பேட்டியின் வாயிலாகவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆடி மாதத்தையொட்டி ஐந்து மண்டலங்களுக்கு அம்மனை தரிசிக்கும் வகையில் இலவச சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
அதில், உதயநிதி துணை முதல்வர் பதவி வகிக்க போகிறாரா என்று செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். நான் திமுக -வின் அடிமட்ட தொண்டன், தலைவன் முன் செல் என்று சொன்னால் முன்னாலும், பின் செல் என்று சொன்னால் பின்னாலும் அப்படியே செய்வேன். துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்குவது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார் என கூறினார். ஆனால் ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு உதயநிதியை நியமித்தால் அதற்கு நான் முழு சம்மதம் அளிப்பேன் என்பதை சூசகமாக அமைச்சர் கூறியுள்ளார்.