உங்கள் கைகளில் உள்ள நகங்களை சுத்தமாக்க வேண்டுமா? அதுக்கு துளசி மற்றும் புதினா மட்டும் போதும்!
நம்முடைய கை விரல்களில் உள்ள நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் நம்முடைய கை விரல்களில் உள்ள நகங்களில் அவ்வப்போது அழுக்குகள் சேரும். இதை நாம் சரியாக சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் நகங்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நம் வயிற்றுக்குள் சென்றுவிடும். மேலும் இந்த அழுக்குகள் நமக்கு நோய்களை ஏற்படுத்த காரணமாகும். எனவே நம்முடைய கை விரல்களில் உள்ள நகங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் ஆகும். எனவே இந்த கை நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி நகங்களை சுத்தமாக வைத்திருப்பது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* துளசி
* புதினா
செய்முறை…
ஒரு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். தண்ணீர் நன்றாக சூடான பின்னர் இதை இறக்கி விட வேண்டும்.
பின்னர் இந்த சூடான தண்ணீரில் எடுத்து வைத்துள்ள துளசி இலைகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் இளஞ்சூடாக மாறும் வரை காத்திருந்து இளஞ்சூடாக மாறிய பின்னர் நம்முடைய கைகளை அந்த தண்ணீருக்குள் விட வேண்டும்.
சிறிது நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு சிறிது நேரம் அந்த பாத்திரத்திற்குள் கைகளை வைத்திருந்தால் கை நகங்கள் சுத்தமாகும். நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கும்.