மலசிக்கலை தீர்க்கும் சுவையான முட்டைகோஸ் சூப்! எவ்வாறு செய்வது?
நாம் அனைவரும் காலை நேரத்தில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை மலச்சிக்கல் தான். ஒரு சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இல்லை என்றாலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு இது அடிப்படையாக அமைந்து விடுகின்றது.
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க பலவிதமான மருந்துகள் இருக்கின்றது. நாட்டு மருந்துகளை விட மக்கள் அனைவரும் ஆங்கில மருந்துகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இது மேலும் நமக்கு பிரச்சனையை கொடுக்கும்.
எனவே மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய நாம் முட்டை கோஸை சூப் செய்து குடிக்கலாம். அதாவது முட்டை கோஸுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து ப
சூப் செய்து ஒரே ஒரு டம்ளர் அளவு குடித்தால் மட்டும் போதும். மலச்சிக்கல் பிரச்சனை பறந்து போய்விடும். அந்த மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் முட்டை கோஸ் சூப்பை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* முட்டை கோஸ்
* மிளகு
* சீரகம்
* இஞ்சி
* பூண்டு
* வெங்காயம்
செய்முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பின்னர் முட்டை கோஸை நறுக்கி அந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். பின்னர் இஞ்சியை தட்டியோ அல்லது சிறிது சிறிதாக நறுக்கியோ அதில் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல பூண்டை நறுக்கி சேர்த்துக் கொள்வது நல்லது.
அதன் பின்னர் சீரகம், மிளகு இவற்றையும் இதில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றின் சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கும். மேலும் முட்டை கோஸ் நன்கு வேக வேண்டும். முட்டை கோஸ் வெந்த பிறகு நாம் இதை இறக்கி விடலாம்.
இதோ உடலுக்கு பல பிரச்சனையை ஏற்படுத்தும் மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் முட்டை கோஸ் சூப் தயார். இந்த முட்டை கோஸ் சூப்பை இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரே ஒரு டம்ளர் மட்டும் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் மறுநாள் காலையில் நமக்கு மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது.