கர்ப்பிணி பெண்கள் வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

0
136
Pregnant women eat a spoonful of this powder to get rid of flatulence!!
Pregnant women eat a spoonful of this powder to get rid of flatulence!!

கர்ப்பிணி பெண்கள் வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல்,வாயுத்தொல்லை,செரிமானக் கோளாறு,வயிற்றுவலி,வயிறு உப்பசம் போன்ற பல உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர்.
இதில் ஹார்மோன் மாற்றத்தினால் ஜீரண சக்தி குறைந்து வயிற்றில் வாயுக்கள் உருவாகிவிடுகிறது.

இந்த வாயுத் தொல்லையில் இருந்து விடுபட உங்கள் வீட்டு சமையலறையில் இருக்க கூடிய மசாலா பொருட்களே போதுமானது.

தேவையான பொருட்கள்:-

1)சோம்பு
2)செலரி
3)சீரகம்
4)பெருங்காயத் தூள்
5)உப்பு

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் 20 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அனைத்து பொருட்களையும் சேர்த்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.

இந்த பவுடரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் போட்டு கலக்கி அருந்தி வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம்
2)சீரகம்
3)வர கொத்தமல்லி
4)உலர் இஞ்சி

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,1/4 தேக்கரண்டி சீரகம்,1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் ஒரு தேக்கரண்டி உலர் இஞ்சி சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

இந்த நீரில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வடிகட்டி குடித்து வந்தால் வாயுத்தொல்லை முழுமையாக குணமாகும்.அதேபோல் தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

Previous articleநரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி ஹேர் டை வாங்க தேவையில்லை!!
Next articleதூசி பட்டாலே தும்மல் அலர்ஜியா.. சூடான பாலில் இதை சேர்த்து குடியுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!