அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் எந்த பகுதியிலிருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.அந்த வகையில் பிரதான் மந்திரி கல்யாணம் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ஏழை எலிய குடும்பங்களுக்கு கூடுதலாக தானியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் சுண்டல் என தொடங்கி மிகவும் சத்து மிக்க உணவு தானியங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டமானது குறிப்பாக மாநிலம் விட்டு வேறொரு மாநிலம் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்டது.ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப உணவு தானியங்கள் வழங்குவதில் வேறுபாடும் காணப்படும். அந்த வகையில் இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ வரை உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது 2020 ஆம் ஆண்டு கொடுவரப்பட்டு நான்கு டிவிஷனை தாண்டி கடந்த ஜனவரி மாதம் ஐந்தாவது முறையாக வழங்கி வந்தனர்.
இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் இதனை கூடுதல் ஐந்து ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அந்த வகையில் இனி வரும் ஐந்து ஆண்டுகளிலும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டம் மூலம் ஐந்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து தானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.மேற்கொண்டு இந்த திட்டத்தால் 80 ஆயிரம் கோடி பேர் பயனடைய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.