உயிரை பறிக்கும் டெங்கு மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

0
127
How to prevent the deadly dengue malaria and swine flu?
How to prevent the deadly dengue malaria and swine flu?

உயிரை பறிக்கும் டெங்கு மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

தமிழகத்தில் மழை காலங்களில் டெங்கு,மலேரியா போன்ற கொசுக்களால் உருவாகும் காய்ச்சல்,பன்றி,கோழி உள்ளிட்ட பறவைகள் மூலம் பரவக் கூடிய காய்ச்சலை தடுக்கும் நோக்கில் அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

நீரில் உருவாகக் கூடிய ஏடிஎஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் உருவாகிறது.தற்பொழுது பருவமழை காலம் என்பதினால் அண்டை மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.

நீர் தொட்டிகள்,தேங்கிய நீர் நிலைகளில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிட்டு புழுக்களை உற்பத்தி செய்கிறது.பிறகு இவை வளர்ந்து கொசுவாக மாறுகிறது.இந்த கொசுக்கள் மூன்று வாரங்கள் உயிர் வாழக் கூடியவை.இந்த ஏடிஎஸ் கொசுக்களின் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறப் புள்ளிகள் தென்படுவதால் இவை புலிக்கொசுக்கள் என்று அழைக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:-

1)உடல் சோர்வு
2)தலைவலி
3)வாந்தி
4)எலும்பு வலி
5)சிறுநீர் பாதையில் இரத்த கசிவு
6)பல் ஈறுகளில் இரத்த கசிவு

டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் ORS கரைசலை நீராகாமராக எடுத்துக் கொள்ளலாம்.மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

வீட்டில் இருக்கின்ற தண்ணீர் தொட்டிகள்,குடங்களை மூடி விட வேண்டும்.தேவையின்றி தண்ணீர் தேங்கி இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

பன்றிக்காய்ச்சல்

ஆரம்ப காலத்தில் பன்றிகளுக்கிடையே பரவி வந்த பன்றிக்காய்ச்சல் நாளடைவில் மனிதர்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.இந்த பன்றிக்காய்ச்சல் ஏஎச்1என்1 இன்ஃப்ளூயன்சா வைரஸ் கிருமிகளால் பரவுகிறது.பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்தால் பன்றி இறைச்சியை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்:-

1)இருமல்
2)தும்மல்
3)தலைவலி
4)சளி
5)தொண்டை வலி
6)வாந்தி
7)வயிற்றுப்போக்கு

வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியதும் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மலேரியா

ஒட்டுண்ணிகளால் ஏற்படக் கூடிய ஒருவகை தொற்றுநோய் மலேரியா.ஆப்ரிக்கா,ஆசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த மலேரியா காய்ச்சல் அதிகளவு பரவி வருகிறது.வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியதும் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.நீரை கொதிக்க வைத்து பருக வேண்டும்.

மலேரியா அறிகுறிகள்:-

1)காய்ச்சல்
2)தலைவலி
3)குமட்டல்
4)வாந்தி
5)உடல் வலி
6)இருமல்
7)குளிர் நடுக்கம்
8)வயிற்றுப்போக்கு

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.