SINUS PROBLEM? இந்த கை வைத்தியம் செய்தால் சைனஸ் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!!
இன்று இளம் வயதினர் பலர் சைன்ஸ் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.நம்மை சுற்றி அதிக மாசு இருப்பது,அலர்ஜி ஏற்படுத்து ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் பின்பற்றுவது போன்ற காரணங்களால் சைனஸ் உண்டாகிறது.
மூக்கு துவாரங்களில் சளி நிரம்பி இருப்பதை தான் சைன்ஸ் என்று அழைக்கின்றோம்.இந்த சைன்ஸ் அலர்ஜி,சளி,வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படுகிறது.
சைனஸ் ஏற்பட்டால் மூக்கு வலி,மூச்சு விடுதலில் சிரமம்,மூக்கில் நீர் வடிதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.சைன்ஸ் பாதிப்பு தீவிரமடைந்தால் மூளைக்காய்ச்சல்,மூளை அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
சைனஸ் பாதிப்பு ஏற்பட்டால் காரசாரமான உணவுகள்,இறைச்சி,மாவுசத்து பொருட்கள் மற்றும் வறுத்த பொருட்கள் எடுத்துக் கொள்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
சைன்ஸ் பாதிப்பை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:
1)சில துளிகள் பெப்பர்மிண்ட் ஆயில் மற்றும் ரோஸ்மேரி ஆயிலை சூடான நீரில் கலந்து ஆவி பிடிப்பதினால் சைன்ஸ் பாதிப்பு குறையும்.
2)மஞ்சள் கிழங்கை பொடி செய்து அதில் டீ போட்டு குடித்து வந்தால் சைன்ஸ் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
3)நாட்டுக்கோழி சூப் செய்து குடித்து வந்தால் சைன்ஸ் பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.
4)சூடான நீரில் பூண்டு சாறு மற்றும் தேன் கலந்து பருகி வந்தால் சைன்ஸ் முழுமையாக குணமாகும்.
5)நொச்சி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்து வந்தால் சைன்ஸ் பாதிப்பு முழுமையாக குணமாகும்.