FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!!

0
304
FLASH: No more parking charges for vehicles standing on roads!! A new announcement has arrived!!
FLASH: No more parking charges for vehicles standing on roads!! A new announcement has arrived!!

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய இருப்பதாக மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பே கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அதேபோல பெரிய கடை, வீதி ரோஸ்கோர்ஸ், கிராஸ் கட், வெரைட்டி ஹால், பாரதி பார்க் சாலை, என் எஸ் ஆர் உள்ளேட்டப் பகுதிகளிலும் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய திட்டமிட்டு வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கு சிட்டிசன் வாய்ஸ் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கும் முன்பே வசூலிக்கப்பட்டு வரும் பார்க்கின் கட்டணம் நிர்ணயித்த தொகை விட ஒப்பந்ததாரர்கள் அதிகளவு வசூல் செய்வதாகவும் மேலும் இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக மின்னணு முறையில் பார்க்கிங் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிரசித்தி பெற்ற முறையில் வண்டி வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை நிறுவுமாறு கூறியுள்ளனர்.

இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் கோவை மாநகராட்சி ஆணையர் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் தற்பொழுது கவனிப்பிற்கு வந்துள்ளது. இது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். குறிப்பிட்ட சில இடங்களை தேர்ந்தெடுத்து வாகனங்கள் நிறுத்துவதற்கு வழிவகை செய்யப்படும். அதன் பிறகு தான் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Previous articleமுதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 
Next article“மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!