இனி இன்சுலின் ஊசி தேவையில்லை.. சர்க்கரை அளவை உடனே குறைக்க ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும்!!
இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் பலர் திணறி வருகின்றனர்.அதிக இனிப்பு உட்கொள்ளுதல்,சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுமுறை பழக்கம்,உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமை போன்ற காரணங்களால் சர்க்கரை வியாதி நம்மை எளிதில் அண்டி விடுகின்றது.
நம் நாட்டில் சர்க்கரை நோயால் அவதிப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உலகிலேயே சர்க்கரை நோய் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.இந்த நோய் பாதிப்பை இயற்கை மருத்துவம் மூலம் குறைக்க ஆசைப்படுபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வரலாம்.
*சோற்றுக்கற்றாழை
ஒரு சோற்றுக்கற்றாழை மடல் எடுத்து அதன் தோல் பகுதியை மற்றும் நீக்கி விடவும்.பிறகு அதன் ஜெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யவும்.5 முதல் 6 முறை இவ்வாறு சுத்தம் செய்தபின்னர் அதை சாப்பிடவும்.கற்றாழை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
*இஞ்சி சாறு
ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்து தேன் கலந்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
*வெந்தயப்பொடி
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் எளிதில் கட்டுப்படும்.அது மட்டுமின்றி உடல் சூடு தணிய வெந்தயம் பெரிதும் உதவுகிறது.
*நெல்லிக்காய்
இரத்தத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க பெரு நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.ஒரு பெரு நெல்லிக்காயை எடுத்து அதன் சதை பற்றை மட்டும் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் மிக்ஸி ஜாரில் அந்த நெல்லிக்காய் சதைப்பற்றை போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நெல்லிக்காய் சாறு ஊற்றி கொதிக்க வைத்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.