திமுக VS காங்கிரஸ் களையும் கூட்டணி.. ஆட்டத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!!
சமீப காலமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. வெளிநடப்பில் தோழமையாக நடந்து கொண்டாலும் உட்க்கட்சி க்குள் வார்த்தை போர் முழங்கி வருகிறதென்றே கூறலாம். அதற்கு ஏற்றார் போல தான் திமுகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் உள்ளது. சமீபத்தில் 2026 ஆம் ஆண்டு வரப்போகும் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற செயல்பாடுகள் குறித்து முதல்வர் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சட்ட ஒழுங்கின்மை என்ற பேச்சு மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியதால் அதனை மீட்க பல முயற்சிகளில் திமுக களமிறங்கியுள்ளது. அந்த வகையில் உதயநிதியுடன் குறிப்பிட்ட ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மிகப்பெரிய வேலையை ஸ்டாலின் நிர்ணயித்துள்ளாராம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து நின்று போட்டியிட்டாலும் பெரும்பான்மை உடைய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
அதற்கேற்றவாறு தொகுதிவாரியான நிர்வாகிகளை தயார் படுத்தும் பணியை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். அப்பாவின் உத்தரவுக்கிணங்க 234 தொகுதி நிர்வாகிகளையும் தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுத்ததோடு இதுபற்றி உதயநிதி ஆலோசனை செய்துள்ளார். மேற்கொண்டு காங்கிரசில் உள்ள நிர்வாகிகளும் பொது மேடையில் தாம் தனித்து நின்று அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
அந்த வகையில் எம்பி கார்த்திக் சிதம்பரம் தற்பொழுது வரை நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் திமுக காங்கிரசை ஏன் கண்டு கொள்ளவில்லை அதற்கான உரிமை நம்மிடம் இல்லையா எனவும் கேட்டுள்ளார். ஆளும் கட்சியாக இல்லாமலும் எதிர்க்கட்சியாக இல்லாமலும் தனித்து காங்கிரஸ் தற்பொழுது உள்ளது.
ஆனால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் இதனை மாற்ற வேண்டுமென்று கூறி வருகிறார். இவர் பேச்சுக்கிணங்கவே, திமுகவும் தமிழ்நாடு சிறுபான்மையினர் தலைவராக இருந்த காங்கிரஸ் சேர்ந்த பீட்டரை பதவி நீட்டிப்பு செய்யாமல் திருச்சபையிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது மேலும் காங்கிரஸ் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் மேடைப் பேச்சுகளில் ஆளும் கட்சியை சார்ந்து நாம் இருக்கக் கூடாது தனித்திருக்க வேண்டும் என கூறி வருகிறார். இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பிளவு ஏற்பட தொடங்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் இருவரும் தனித்து போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.