2 நாளில் பாத வெடிப்பு சரியாக வீட்டிலிருக்கும் டூத் பேஸ்ட் போதும்!! உடனே இதை செய்யுங்கள்!!

0
155
Foot eruption in 2 days is enough toothpaste at home!! Do this now!!
Foot eruption in 2 days is enough toothpaste at home!! Do this now!!

2 நாளில் பாத வெடிப்பு சரியாக வீட்டிலிருக்கும் டூத் பேஸ்ட் போதும்!! உடனே இதை செய்யுங்கள்!!

உங்களில் பலர் முகப் பராமரிப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு கொடுப்பதில்லை.இதனால் சிறு வயதிலேயே பாத வெடிப்பு,சேற்றுப்புண்,பாத வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க செலவில்லாத எளிய வீட்டு வைத்தியங்களை செய்து பலன் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பேஸ்ட்
2)உருளைக்கிழங்கு
3)எலுமிச்சை சாறு

செய்முறை:-

முதலில் மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் சாறு கிடைக்கும்.அதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாற்றை உருளைக்கிழங்கு சாற்றில் பிழிந்துவிடவும்.

அதன் பின்னர் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் ஒரு துளியை அதில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை குதிகாலில் அப்ளை செய்து பிறகு கழுவி வந்தால் அங்கு உருவான வெடிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கல் உப்பு
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்களுக்கு சூடுபிடித்துக் கொள்ளவும்.பிறகு அதை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி சிறிது கல் உப்பு சேர்த்து கால் பாதங்களை அதில் வைத்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

பிறகு பாதங்களை ஒரு பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தப்படுத்தவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பாதவெடிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பெண்ணெய்
2)நல்லெண்ணெய்
3)விளக்கெண்ணெய்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி வேப்பெண்ணெய்,ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையை ஒன்றாக மிக்ஸ் செய்து கால் பாதங்களில் அப்ளை செய்து சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.இப்படி செய்து வந்தால் பாதவெடிப்பு முழுமையாக குணமாகும்.

Previous articleஇறந்த ஒருவரின் நகை மற்றும் பொருட்களை பயன்படுத்தினால் என்னாகும்? முழு விவரம் உள்ளே!
Next articleதெரிந்து கொள்ளுங்கள்!! பீரியட்ஸ் டைமில் உடலுறவு வைப்பது சரியா.. குழந்தை உண்டாக வழிகள் உள்ளதா!!