தமிழக மின்வாரிய தலைவர் அதிரடி பணி மாற்றம்! திடீர் உத்தரவு எதற்காக?

0
105

அண்மையில் மின்வாரிய துறையில் கட்டணம் குறித்த சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் தமிழக மின்வாரிய தலைவராக இருந்த விக்ரம் கபூர் அதிரடி பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மின்வாரியக் கட்டணம் அதிகம் வந்துள்ளதாக பலதரப்பில் புகார் எழுந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகளும், விமர்சனங்களும் மின்வாரியத்தின் மீது வைக்கப்பட்டது.

மேலும் ஊரடங்கு காரணத்தை வைத்து மின் கட்டணம் உயர்ந்துவிடுமோ என்று மக்களிடம் அதிருப்தி ஏற்படும் நிலை உண்டானது. ஏற்கனவே ஊரடங்கு சிக்கலால் வருமானம் இல்லாமல் தவித்து வரும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் குறித்த தேவையற்ற சந்தேகங்கள் இதனால் எழும்பியது.

இந்நிலையில் தமிழக மின்வாரியத்தின் தலைவராக இருந்த விக்ரம் கபூர் தற்போது சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை மெட்ரோ ரயிலின் இயக்குனராகப் பணிபுரிந்து வரும் பிரதீப் யாதவ் அவர்களுக்கு தமிழ்நாடு மின்பகிர்மான கழக நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணத்தால் வருமானம் இல்லாமை மற்றும் வேலையிழப்பை சந்தித்து வரும் பொதுமக்களுக்கு இந்ந அசாதாரண சூழலில் எந்தவித கட்டண உயர்வையும் விரும்பமாட்டார்கள், மீறி உயர்த்தினால் அவை சிக்கலுக்கே வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.