மாதம் தொடக்கத்திலேயே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று சிலிண்டர் விலை மற்றும் மின்கட்டணம் குறித்துதான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை இருமுறை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் மின் பகிர்மான கழகத்தின் வரும் நிதி இழப்பை அரசை பார்த்துக் கொள்ளும் என்று கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் ஆளும் கட்சி அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் 2.47 கோடி பேர் உபயோகிக்கும் மின் நுகர்வோரில் ஒரு கோடி பேருக்கும் மட்டும் இதிலிருந்து விலக்கு கொடுத்துள்ளனர்.
அதேபோல உலக நாடுகளின் கச்சா சந்தையின் நிலவரப்படி இங்கு மாநிலத்திற்கேற்ப சிலிண்டர் விலையில் மாற்றம் உண்டாகும். அந்த வகையில் கடந்த முறை வணிக சிலிண்டர் விலை சற்று குறைவாக இருந்தது. இம்முறை வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி வீடுகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்களில் கியூ ஆர் கோட் அமைப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். இவ்வாறு கியூ ஆர் கோட் மூலம் சிலிண்டர் விநியோகிக்கும் பொழுது திருட்டு மற்றும் கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்துவதை தடுக்கலாம் என தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த முறை தற்பொழுது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனிடையே தமிழகத்தில் மாணவிகளுக்கு வழங்கியது போலவே மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்குவதற்கான செயல்பாடுகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கியானது இனி நாம் 15 ஆயிரத்திற்கும் மேல் பரிவர்த்தனை செய்யும் பொழுது அதற்கு என்று தனி பிடித்தம் செய்யப்படும் என கூறியுள்ளது. அதாவது 15000க்கு மேல் நாம் பண பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் மொத்தத் தொகையிலிருந்து ஒரு சதவீதம் என்று பிடித்தம் செய்யப்படும். அதிலும் வண்டிகளுக்கு எரிபொருளாக எச்டிஎப்சி கார்டு உள்ளிட்டவைகள் பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து விலக்கு அளித்துள்ளனர்.