இந்த 4 அறிகுறிகள் இருந்தால் கருச்சிதைவு ஏற்படும்! இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது மிகவும் சந்தோஷமான தருணமாக உள்ளது.ஆனால் இன்று பெரும்பாலான பெண்கள் எளிதில் கர்ப்பமடைய முடியாமல் தவிக்கின்றனர்.கரு தங்காமை,நீர்க்கட்டி மற்றும் தைராய்டு போன்ற பாதிப்புகளால் கருவுறுதலில் தாமதம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இதில் கரு உருவாகி சில வாரங்களில் கருச்சிதைவு ஏற்படுவது என்பத பெண்களுக்கு மிகவும் மோசமான தருணமாகும்.தாய்மை என்ற வரத்தை பெற பல பெண்கள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் கருவுற்றும் அவை கருப்பையில் தங்காமல் போனால் பெண்களுக்கு அவை அதிக வலியை கொடுக்கும்.
கருச்சிதைவு உண்டாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.குறிப்பாக குழந்தையின் குரோமோசோமில் தவறு நிகழ்ந்தால் கருச்சிதைவு ஏற்படும்.கருமுட்டை சேதமடைதல்,குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர் கருவுதல்,கருப்பையில் கருப்பதிப்பு சரியாக நிகழாமல் இருத்தல்,கர்ப்பம் தரித்த பின்னர் ஏற்படும் அதிர்ச்சி போன்ற பல காரணங்களால் கருச்சிதைவு ஏற்படுகிறது.
கருச்சிதைவை முன்கூட்டியே அறிய உதவும் அறிகுறிகள்:
1)தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் அதிக இரத்தப் போக்கு
2)இரத்தக் கட்டிகளுடன் வெளியேறும் இரத்தப் போக்கு
3)அதிகப்படியான முதுகு,வயிற்றுப் பிடிப்புகள்
4)எடை இழப்பு மற்றும் பிறப்புறுப்பில் திரவ வெளியேற்றம்
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்:
1)40 வயதை கடந்த பின்னர் கருவுறுதல்
2)புகை மற்றும் மதுப்பழக்கம்
3)ஆரோக்கியமற்ற கருப்பை
4)சிதைந்த கருமுட்டை
5)தைராய்டு
6)நீரிழிவு நோய்
கருச்சிதைவை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
1)ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்ற வேண்டும்.
2)ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
3)மது மற்றும் புகை பழக்கம் இருந்தால் பெண்கள் அதை கைவிட வேண்டும்.
4)கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது.
5)இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
6)உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும்.
7)நன்றாக உறங்க வேண்டும்.தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டும்.