அக்கி நோயை அடித்து விரட்டும் “ஊமத்தை பூ”!! இப்படி பயன்படுத்தினால் நொடியில் ரிசல்ட் கிடைக்கும்!
நமது சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் ஒன்று அக்கி.இவை மிகுந்த வலியை ஏற்படுத்த கூடிய கொப்பளங்களாகும்.சின்னம்மை நோயை உருவாக்கும் வைரஸால் அக்கி நோய் உண்டாகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அக்கி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.50 வயதை கடந்தவர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்படக் கூடும்.
அக்கி அறிகுறிகள்:-
1)தோல் வலி
2)தோல் எரிச்சல்
3)சிவந்த நிற கொப்பளங்கள்
அக்கி வருவதற்கான காரணங்கள்:-
1)உடல் உஷ்ணம் உள்ளவர்கள்
2)தோலில் அழுக்கு படிந்திருப்பவர்
அக்கியை குணமாக்கும் வழிமுறைகள்:
*தேங்காய் எண்ணெய்
*ஆலம் விழுது
50 கிராம் ஆலம் விழுதை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து அக்கி மீது பூசி வந்தால் பலன் கிடைக்கும்.
*ஊமத்தை பூ
*வெண்ணெய்
ஒரு ஊமத்தை பூவையை அரைத்து வெண்ணையில் கலந்து அக்கி மீது பூசி வந்தால் பலன் கிடைக்கும்.
*செம்மரப்பட்டை
அக்கி வலி,எரிச்சல் குணமாக செம்மரப்பட்டை பொடியை நீரில் குழைத்து பூசலாம்.
*அமுக்ரா கிழங்கு பொடி
*பால்
*பனங்கற்கண்டு
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு தேக்கரண்டி அமுக்ரா கிழங்கு பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்து வந்தால் அக்கி பாதிப்பு முழுமையாக குணமாகும்.
*பூங்காவி மூலிகை பொடி
*பன்னீர்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பூங்காவி என்ற மூலிகை பொடியை வாங்கிக் கொள்ளவும்.இதில் ஒரு தேக்கரண்டி பொடியில் சிறிது பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி மீது பூசி வந்தால் சில நாட்களில் புண்கள் ஆறிவிடும்.மேலே குறிப்பிட்டுள்ள எந்த மருந்துகளையும் பயன்படுத்துவதற்கு முன்னர் தண்ணீரில் ஒரு வெள்ளை காட்டன் துணியை நினைத்து அக்கி மீது ஒத்தி எடுத்த பின்னர் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
அது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய தயிர்,இளநீர்,மோர் போன்ற குளிர்ச்சி தரக் கூடிய இயற்கை பானங்கள் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.