பொன்முடிக்கு கிளாஸ் எடுத்த பாஜக.. முதலில் நீ சரியா படி அடுத்து மற்றவர்களை கிண்டல் செய்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0
259
BJP took a class from Ponmudi.. First read yourself correctly and then tease others!! Viral Twitter Post!!
BJP took a class from Ponmudi.. First read yourself correctly and then tease others!! Viral Twitter Post!!

 

சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உலக அரசியலமைப்பு நாள் நிறைவு குறித்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் தன்னை முன்னாள் ஆசிரியராக பாவித்து மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பேராசிரியர்களிடம் கேள்விகளை கேட்டார். இது தற்பொழுது சர்ச்சைக்குரிய விதமாக மாறியுள்ளது. இதற்கு முன்பாகவே பல மேடைகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்து பெண்களை ஓசி என்று கூறி இவருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

அதேபோல மேடையில் எப்படி பேராசிரியர்கள் என அனைவரையும் மதிப்பின்றி பேச முடியும் என கூறி தற்பொழுதும் இவர் மீது குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். நேற்று நடந்த விழாவில் அமைச்சர், யூனிட்டரி ஸ்டேட் என்றால் என்ன அது எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார். மாணவர்கள் அனைவரும் மௌனம் காத்த நிலையில் அந்த கேள்வி பேராசிரியர்கள் பக்கம் திரும்பியது. யூனிட்டரி ஸ்டேடானது புதுச்சேரி என்று ஒரு பேராசிரியர் கூறியுள்ளார். உடனடியாக அமைச்சர், என்னைய ப்ரொபசர் நீ முதலில் உங்களுக்கெல்லாம் பாடம் எடுக்க வேண்டும் என்று மேடையிலேயே திட்டியுள்ளார்.

மேற்கொண்டு யூனிட்டரி ஸ்டேட் என்பது ஒற்றை ஆட்சி முறை இதற்கு கீழ் மாநிலங்கள் ஏதும் இருக்காது. அதுமட்டுமின்றி இது இங்கிலாந்தில் உள்ளது என்று கூறினார். தற்பொழுது இதனை தமிழக பாஜக துணைத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யூனிட்டரி ஸ்டேட் என்றால் ஐக்கிய அரசுதான் அதன் கீழ் தான் இங்கிலாந்து ஸ்காட்லாந்து என பல நாடுகள் உள்ளது. இது கூட அறியாமல் பேராசிரியர்களையும் மாணவர்களையும் கேலியாக பொன்முடி பேசியது தற்பொழுது அதை விட சிரிப்பாக உள்ளது.

அதுமட்டுமின்றி பேராசிரியர்களும் படிக்கும் மாணவர்களும் அரசியல் பற்றி என்ன படித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அரசியலில் ஊழல் எப்படி செய்ய வேண்டும் அதில் எப்படி வளர வேண்டும் என்று அறிந்த பொன்முடி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எதிராக கேள்வி கேட்டது மிகவும் தவறானது. வழக்கம்போல் பேராசிரியர்களுக்கு ஒரு மரியாதை கூட கொடுக்காமல் வாயா போயா என்று அழைத்திருக்கக் கூடாது. நான் தான் சரி மற்றவர்கள் சொல்வது தவறானது எனக் கூறி மட்டம் தட்டி பேசுவது தான் இந்த அமைச்சரின் ஒரே வேலை.

அதுமட்டுமின்றி முன்னதாகவே பெண்களை அவதூறாக பேசினார் அதனை யாராலும் மறக்க முடியாது தற்பொழுது பேராசிரியர்களையும் பேசியுள்ளார். அமைச்சர் என்ற பதவி இருந்தால் அனைவரையும் மரியாதையற்று பேசலாம் என ஏதாவது வரைமுறை உள்ளதா. மரியாதை கொடுத்தால் தான் அதற்குண்டான மரியாதை நமக்கும் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை அவை நாகரிகமும் தெரியவில்லை. அதை முதல் கற்றுக்கொண்டு அதன்பின் மற்றவர்கள் அனைவரையும் கிண்டல் செய்யட்டும் இதுதான் திமுகவின் திராவிட மாடல் என்று கூறியுள்ளார்.

Previous articleசேலம் மாவட்டத்தில் விநோதம்!! கோவில் கட்ட ஏலியன்களிடம் பெர்மிஷன் வாங்கிய நபர்!!
Next articleமாணவிகளே ரெடியா!! ஸ்கூட்டர் வாங்க இந்த ஆவணங்கள் கட்டாயம்.. அரசு வெளியிடப்போகும் சூப்பர் அறிவிப்பு!!