அட இதெல்லாம் கொழுப்பு லிஸ்டில் இருக்கின்ற பொருட்களா? எது நல்ல கொழுப்பு? எது கெட்ட கொழுப்பு?
நாம் உண்ணும் உணவில் இருக்கக் கூடிய முக்கிய சத்துக்களில் ஒன்று கொழுப்புகள்.உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்புசத்து நிறைந்த உணவுகள் அவசியமாகும்.உடலில் செல் வளர்ச்சி,ஹார்மோன் உற்பத்திக்கு கொழுப்புகள் உதவுகின்றன.
கோழி,இறைச்சி,மீன்,பால் போன்ற பொருட்களில் இருந்து கிடைக்கின்ற கொழுப்புகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.இதில் நல்ல கொழுப்புகள்,கெட்ட கொழுப்புகள் என்று இரு வகைகள் இருக்கின்றது.
கொழுப்பின் வகைகள்:
1)விலங்குக் கொழுப்பு
2)பால் பொருட்களில் இருந்து கிடைக்க கூடிய புலனாகும் கொழுப்பு
3)தாவரக் கொழுப்பு
விலங்கு கொழுப்பு:
இறைச்சி,கோழி,மீன் உள்ளிட்டவை விலங்குகளில் இருந்து கிடைக்க கூடிய பொருட்கள் ஆகும்.இதில் அதிக கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தாவரக் கொழுப்பு:
சூரிய காந்தி,நிலக்கடலை,கடுகு,எள்,தேங்காய்,ஆலிவ்,சோயா போன்ற விதைகளில் இருந்து கிடைக்க கூடியவை தாவர எண்ணெயாகும்.இதில் ஆலிவ்,சூரிய காந்தியில் குறைந்த கொழுப்புகள் இருப்பதினால் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
புலனாகும் கொழுப்புகள்
பால்,பாலிலிருந்து கிடைக்க கூடிய நெய்,வெண்ணெய்,சீஸ்,பன்னீர் போன்றவை புலனாகும் கொழுப்பு வகைகளாகும்.அதேபோல் முட்டை,தானியங்களில் புலனாகும் கொழுப்புகள் உள்ளது.இதில் ஜீஸ்,நெய்,வெண்ணெய் போன்ற பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நல்ல கொழுப்புகள்:
சூரியகாந்தி எண்ணெய்,ஆலிவ் எண்ணெய்,மீன்,தானியங்கள்,கொட்டை வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் நல்ல கொழுப்புகள் அதிகளவு நிறைந்திருக்கிறது.
கெட்ட கொழுப்புகள்:
சீஸ்,பாலாடை,இறைச்சி,நெய்,வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களில் அதிகளவு கொழுப்புகள் இருப்பதால் இதய நோயாளிகள்,உடல் பருமன் உள்ளவர்கள் இதுபோன்ற உணவுப் பொருட்களை தவிர்த்தல் நல்லது.