திடீரென வயிற்றில் சத்தம் கேட்கறதா? இது உங்களுக்கு எச்சரிக்கை மணி.. நண்பர்களே!!
உங்களில் பலர் சில சமயங்களில் வயிற்றுப்பகுதியில் ஒருவித சத்தம் ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்.இப்படி சத்தம் கேட்டால் பசி வந்துவிட்டது என்று அனைவரும் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஏன் நீங்கள் கூட பசிக்கான அறிகுறிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.ஆனால் உண்மையால் இது பசிக்கான அறிகுறிகள் அல்ல.இது நம் வயிற்றுப்பகுதியில் பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.
வயிற்றுப் பகுதியில் சத்தம் எழுவதற்கான காரணங்கள்:
1)அஜீரணக் கோளாறு
2)வயிற்றுப்போக்கு
3)வாயுத் தொல்லை
4)குடல் தொடர்பான பிரச்சனை
5)வயிற்றில் சத்தம் ஏற்படக் காரணங்கள்
6)குடல் சுவர்களில் தசை சுருக்கம்
வயிற்றுப்பகுதியில் ஏற்படக் சத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள்:
*அடிவயிற்று வலி
*வயிற்றுப் போக்கு
*வயிற்று வீக்கம்
*வாந்தி
*காய்ச்சல்
*பசியின்மை
*அதிகமான உடல் சோர்வு
குடலில் உணவு,திரவங்கள்,வாயுக்கள் நகரும்போது வயிற்றில் சத்தங்கள் ஏற்படும்.குடல் செயல்பாடு அதிகமாக இருக்கும் பொழுது அதிகப்படியான சத்தங்கள் ஏற்படும்.செரிமானக் கோளாறு பாதிப்பை சந்தித்து வருபவர்களுக்கு வயிற்றில் சத்தம் கேட்கும்.குடல் சுருங்கிய நிலையில் இருக்கும் பொழுது உணவை உட்கொண்டால் சத்தம் ஏற்படும்.
வயிறு காலியான நிலையில் இருக்கும் பொழுது பசி உணர்வு ஏற்படலாமலே வயிற்றுக்குள் ஒருவித சத்தம் ஏற்படும்.இப்படி வயிறு அடிக்கடி சத்தம் போடுவது இரைப்பை,குடல் பிரச்சினைகள்,மலக்குடல் அழற்சி உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
அதேபோல் வயிற்று வீக்கம்,சுவாச பிரச்சனை,வீசிங்,ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் வயிற்றில் சத்தங்கள் உண்டாகும்.
வயிற்றில் சத்தம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
1)உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும்.
2)புரோபயாடிக் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
3)தினமும் சுவாசப் பயிற்சிகள் செய்து வர வேண்டும்.