குழந்தைகளின் உடல் எடையை கூட்டும் யுக்தி!! இந்த டிப்ஸ் திருப்திகரமாக இருக்கும்!!
பொதுவாக ஒரு வயதிற்கு கீழ் இருக்கின்ற குழந்தைகளின் உடல் எடை குறைவாகத் தான் இருக்கும்.ஆக்டிவாக செயல்படும் குழந்தைகளுக்கு எளிதில் உடல் எடை கூடாது.ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்,உரிய அளவு உணவு எடுத்துக் கொள்ளாமை போன்ற காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
இதனால் சில தாய்மார்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஆரோக்கியமற்ற உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உடல் எடை கூடாமல் இருப்பது நார்மல் தான்.உணவு சாப்பிடாமல் அடம் பிடிப்பதினால் அவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லை.
ஆனால் மருத்துவர்கள் கூறும் சில அறிவுரைகளை பின்பற்றி வந்தால் குழந்தைகளின் உடல் எடையை எளிதில் அதிகரித்துவிடலாம்.அதிக கலோரிகக்ள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும்.
புரதச் சத்து நிறைந்த முட்டை,பால்,கொழுப்பு சத்து நிறைந்த ஊட்டச்சத்து மிக்க பொருட்களை குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கலாம்.பெரியவர்களை போல் குழந்தைகளால் ஒரே நேரத்தில் அதிகளவு உணவை உட்கொள்ள முடியாது.அப்படி இருக்கையில் இடைவேளை விட்டு குழந்தைகளுக்கு உணவு கொடுக்கலாம்.
நன்கு வேகவைக்கப்ட எலும்பு இல்லாத மாமிசத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் உடல் எடை கூடும்.குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்கு முன் மற்றும் உணவு கொடுத்த பின்னர் சிறிது நேரம் தண்ணீர் அருந்தக் கொடுக்க வேண்டாம்.குழந்தைகளின் வயிற்றில் புழுகள் அதிகளவு இருந்தால் உடல் எடை கூட மாட்டார்கள்.அப்படி இருக்கையில் குழந்தைகளின் வயிற்றில் இருக்கின்ற குடற்புழுக்களை விரைவில் அகற்றிவிடுவது நல்லது.