நயன்தாரா சொல்வது போல் செம்பருத்தி டீ ஹெல்த்திற்கு நல்லதா? ஆதாரத்துடன் மருத்துவர் கொடுத்த விளக்கம்!!
பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா,செம்பருத்தி டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றது.
இன்ஸ்டாகிராமில் நயந்தாராவை 8.7 மில்லியன் பேர் பாலோ செய்து வரும் நிலையில் தன்னை பின்பற்றுபவர்களுக்கு நயன்தாரா தவற மருத்துவ வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறார் என்று பிரபல கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் “செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.இதை எனது டயட்டின் ஒருபகுதியாக்கியவர் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால்.இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் நிறைந்து காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நீரிழிவு நோய்,ஹை-கொலஸ்ட்ரால்,உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவியாக இருக்கும்.
தவிர இது நம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தர கூடியது என்பதால் முகப்பரு உள்ளிட்ட சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். மேலும் செம்பருத்தி டீயில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் மழை காலத்திற்கு சிறந்தது,மேலும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை சிறப்பாக வைத்திருக்கும்.மேலும் இது ஆன்டிபாக்டீரியல் விளைவுகளை கொண்டுள்ளது என்பதால் பருவகால தொற்று அல்லது நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது என்று அதில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நயன்தாராவின் செம்பருத்தி டீ பதிவு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கல்லீரல் நிபுணர் பிலிப்ஸ் அவர்கள் ஆதாரத்துடன் விமர்சித்திருக்கிறார்.
நடிகை நயன்தார பதிவிட்ட செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து மருத்துவ ரீதியாக நிரூபணம் செய்யப்படவில்லை.நயன்தாராவின் போஸ்ட் பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரம் போன்று தெரிகின்றது.செம்பருத்தி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்ற நயன்தாராவின் பதிவிற்கு ஆதாரத்துடன் மறுப்பு தெரிவித்துள்ளார் பிலிப்ஸ்.
மேலும் 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டியுள்ள அவர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதனை குறைக்க செம்பருத்தி டீ உதவும் என்பதற்கான அதிகாரப்பூர்வ சான்று இல்லை.திருமண வயதில் உள்ள ஆண்,பெண் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருப்பவர்கள் செம்பருத்தி டீயை பருக வேண்டாமென்று தனது எக்ஸ் தள பக்கத்தில் டாக்டர் பிலிப்ஸ் பதிவிட்டிருக்கிறார்.