வெர்டிகோ தலைச்சுற்றல்: குனிந்து நிமிர்ந்தால் கிறுகிறுன்னு வருதா? பிரச்சனைக்கான காரணமும் அதற்கான எளிய தீர்வும்!
உங்களில் சிலருக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது காரணமில்லாமல் திடீரென்று தலைசுற்றுவது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கும்.அதிகப்படியான சத்தங்களால் சிலருக்கு தலைசுற்றல் ஏற்படும்.தலைசுற்றல்,மயக்கம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக் கூடிய ஒரு பொதுவான பாதிப்பு தான் என்றாலும் அடிக்கடி இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்கிறீர்கள் என்றால் அலட்சியம் கொள்ளாமல் அதற்கான மற்றும் குணப்படுத்தும் வழிகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
சிலருக்கு குனிந்து நிமிர்ந்தால் தலை கிறுகிறுவென்று சுத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.சிலருக்கு படுக்கையில் இருந்து எழுந்த உடன் சில நிமிடங்கள் தலை சுற்றும்,சிலருக்கு தண்ணீர் குடிக்கும் பொழுது,கழுத்தை திடீரென்று திருப்பும் பொழுது தலைசுற்றும்.எதற்கு வெர்டிகோ தலைசுற்றல் என்று பெயர்.
வெர்டிகோ தலைசுற்றல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
1)தலையில் அடிப்படல்
2)பக்கவாதம்
3)வலிப்பு
4)இரத்தநாள பாதிப்பு
5)ஒற்றை தலைவலி
வெர்டிகோ தலைசுற்றல் அறிகுறிகள்:
1) உடல் வலி
2)உடல் சோர்வு
3)மயக்கம்
4)குமட்டல் மற்றும் வாந்தி
5)அதிகப்படியான வியர்வை
6)கண்பார்வை மங்குதல்
வெர்டிகோ தலைவலி ஏற்படாமல் இருக்க சில ஆரோக்கிய வழிமுறைகள்:
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் வெர்டிகோ தலைவலி ஏற்படும்.எனவே உடலுக்கு தேவையான நீரை அருந்துவது அவசியமாகும்.அதேபோல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
படுக்கையில் இருந்து எழுந்தது தலைசுற்றுவது போன்ற உணர்வு தோன்றினால் உடனடியாக எழாமல் மெல்ல மெல்ல எழுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.
உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் மயக்கம்,தலைசுற்றல் ஏற்படும்.எனவே பித்தத்தை அதிகரிக்க கூடிய உணவுகள் எடுத்துக் கொள்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
மேலும் தேநீர்,காபி போன்ற பானங்களை தவிர்த்து இயற்கை பானத்தை தயார் செய்து அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.