Periods Pain: பீரியட்ஸ் டைமில் வரும் வயிறு வலியை இப்படி செய்து குறைக்கலாம்!!

0
136
Periods Pain: Abdominal pain during periods can be reduced by doing this!!
Periods Pain: Abdominal pain during periods can be reduced by doing this!!

Periods Pain: பீரியட்ஸ் டைமில் வரும் வயிறு வலியை இப்படி செய்து குறைக்கலாம்!!

பெண்கள் மாதம் ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்கள்.மாதவிடாயின் போது வயிற்று வலி,அதிகளவு இரத்த போக்கு ஏற்படுவது பொதுவான ஒரு நிகழ்வு தான் என்றாலும் சில பெண்களுக்கு இது அசௌகரியத்தை கொடுக்கின்றது.

பெண்கள் தங்களின் மாதவிடாயின் போது அன்றாட வேலைகளை செய்வதில் சற்று சிரமத்தை சந்திக்கின்றனர்.இதில் மாதவிடாயின் போது வரும் வயிற்றுவலியை கட்டுப்படுத்த சிலர் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.ஆனால் மாதவிடாய் வலியை குணமாக்க இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்ல முடிவாக திகழும்.

தீர்வு 01:

1)இஞ்சி
2)தேன்

ஒரு பீஸ் இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் இடித்த இஞ்சியை அதில் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் வயிறு வலி குணமாகும்.

தீர்வு 02:

1)தண்ணீர்
2)காட்டன் துணி

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு காட்டன் துணியை அதில் போட்டு பிழிந்து அடி வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி நீங்கும்.

தீர்வு 03:

1)பட்டை
2)தேன்

ஒரு பீஸ் பட்டையை இடித்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.பின்னர் 150 மில்லி தண்ணீரை அதில் ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க விடவும்.இந்த நீரை வடிகட்டி தேன் கலந்து குடித்தால் வயிறு வலி குணமாகும்.

தீர்வு 04:

1)சோம்பு
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் மாதவிடாய் வயிறு வலி குணமாகும்.

தீர்வு 05:

1)வெந்தயம்
2)தண்ணீர்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி 150 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் மாதவிடாய் வலி குணமாகும்.

Previous articleஇந்த ஜூஸை தலைக்கு தேய்த்தால் வாழ்நாளில் உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது!!
Next articleநரம்பு தளர்ச்சியை குணமாக்க உதவும் கிழங்கு பொடி!! இதை விட எளிய வைத்தியம் இருக்கவே முடியாது!!