எச்சரிக்கை.. பாகற்காய் உடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!!
கசப்பு சுவை மிகுந்த காய்கறியான பாகற்காயில் வைட்டமின் ஏ,பி2,கே,கால்சியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.
பாகற்காயில் இருக்கின்ற புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கின்ற இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஓர் அருமருந்தாகும்.உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் இது கசப்பு சுவை நிறைந்த ஒரு உணவுப் பொருளாக இருப்பதினால் சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ஒதுக்கி விடுகின்றனர்.குடலில் இருக்கின்ற புழுக்கள் வெளியேற பாகற்காயை அரைத்து குடித்து வரலாம்.உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய பாகற்காயை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து உட்கொண்டால் அது விஷமாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பகற்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுபு பொருட்கள்:
1)முள்ளங்கி
பாகற்காயுடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிடக் கூடாது.ஒருவேளை இந்த காமினேஷனில் உணவு எடுத்துக் கொண்டால் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.தலைசுற்றல்,வாந்தி,மயக்கம் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.
2)பால்
பாகற்காய் உணவு சாப்பிட்ட பின்னர் பால் குடிக்க கூடாது.பாகற்காய் உணவு உட்கொண்ட பிறகு பால் குடித்தால் வயிறு எரிச்சல்,மலசிக்கல்,செரினமானக் கோளாறு,வயிறு உப்பசம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
3)ஆட்டிறைச்சி
பாகற்காய் உடன் ஆட்டிறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து கொள்ள கூடாது.இதனால் செரிமானக் கோளாறு ஏற்படக் கூடும்.
4)மசாலா பொருட்கள்
பாகற்காய் சமைக்கும் பொழுது கிராம்பு,பட்டை,ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
5)மாம்பழம்
பாகற்காய் உணவு எடுத்துக் கொண்ட பின்னர் மாம்பழம் அல்லது வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.அவ்வாறு சாப்பிட்டால் வயிற்று வலி,செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.