நம் கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான நாளமில்லா சுரப்பி தைராய்டு.இதன் முக்கிய பணி தைராய்டு ஹார்மோன்களை சுரப்பு தான்.இதன் மூலம் உடலிலுள்ள திசுக்களின் வளர்ச்சிதை மாற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது.இந்த தைராய்டு சுரப்பி ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்தல் அல்லது தேவையான ஹார்மோன்களை சுரக்க செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்கள் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆண்களை விட பெரும்பாலும் பெண்கள் தான் தைராய்டு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் முறையற்ற மாதவிடாய்,கருத்தரித்தலில் தாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதில் ஹைபோதைராய்டிஸம்,ஹைபர்தைராய்டிஸம்,தைராய்டு காய்டர்,தைராய்டு கட்டிகள்,தைராய்டு புற்றுநோய் என்று பல்வேறு நிலைகள் இருக்கின்றது.
ஹைப்போ தைராய்டிஸம்
தைராய்டு சுரப்பி உடலுக்கு போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத நிலையை ஹைப்போ தைராய்டிஸம் என்கின்றோம்.
அறிகுறிகள்:
1)உடல் சோர்வு
2)சரும பிரச்சனை
3)எடை கூடுதல்
4)மறதி
5)மனச்சோர்வு
6)மலச்சிக்கல்
7)முடி உதிர்வு
8)மூட்டுகளில் வீக்கம்
9)இதயம் திடிரென்று மெதுவாக அல்லது வேகமாக துடிப்பது
ஹைப்பர்தைராய்டிஸம்
உடலுக்கு தேவையான ஹார்மோன்களை விட அதிகளவு சுரந்தால் அது ஹைப்பர் தைராய்டிஸம் ஆகும்.
அறிகுறிகள்:
1)பதட்டம்
2)படபடப்பு
3)முடி உதிர்தல்
4)கை நடுக்கம்
5)அடிக்கடி மலம் கழித்தல்
6)சீரற்ற மாதவிடாய் சுழற்சி
7)எடை குறைதல்
8)தூக்கமின்மை
9)சருமம் மெலிதல்
ஹைப்போதைராய்டிஸம் அல்லது ஹைப்பர் தைராய்டிஸத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் உரிய காலத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.காரணம் தைராய்டு கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறக் கூடும்.எனவே இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.