உங்கள் காலில் உள்ள சேற்றுப்புண் நீங்க எளிய வீட்டு வைத்தியம்!! நிரந்தர தீர்வு கிடைக்க உடனே ட்ரை பண்ணுங்க!!
நமது கால் விரல்களின் இடுக்குகளில் ஏற்படுகின்ற சேற்றுப்புண்கள் அதிகப்படியான எரிச்சல் மற்றும் வலியை உண்டாக்குகிறது.நீண்ட நேரம் கால்கள் நீரில் ஊரிப் போனால் சேற்றுப்புண் உருவாகும்.மழை காலங்களில் கால் விரல் இடுக்குகளில் பூஞ்சை தொற்றுகள் உருவாகி சேற்றுப்புண்ணாக மாறுகிறது.
கால் வ விரல்கள் மட்டுமல்ல குதிகால் பகுதியிலும் சேற்றுப்புண்கள் உருவாகிறது. சேற்றுப்புண்களை குணப்படுத்த முயற்சிக்காவிட்டால் நாளடைவில் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசக் கூடும்.
சேற்றுப்புண்கள் யாருக்கு ஏற்படும்?
நீண்ட நேரம் நீரில் இருப்பவர்களுக்கு கால்களில் புண்கள் வரக் கூடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சேற்றுப்புண் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சேற்றுப்புண்கள் உருவாகும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சேற்றுப்புண் வரக் கூடும்.
சேற்றுப்புண் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அதிக நேரம் தண்ணீரில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.இரவு உறக்கத்திற்கு முன்னர் கால்களில் வெது வெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.அடிக்கடி கால் இடுக்குகளை காட்டன் துணியால் துடைக்க வேண்டும்.
காலுறை ஈரமான நிலையில் அணிவதால் சேற்றுப்புண் வரக் கூடும்.எனவே காலுறை அணியும் பழக்கம் இருப்பவர்கள் அதை நன்கு வாஷ் செய்து உலர்த்தி அணிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கால் இடுக்குகள் ஒன்றுடன் ஒன்று உரையாமல் இருக்க காலை மற்றும் இரவு என்று இரு நேரங்கள் விரல்களுக்கு நடுவில் பென்சில் துண்டுகளை வைத்து கால்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கலாம்.
குளிப்பதற்கு முன்னர் கால் விரல்கள் மற்றும் இடுக்குகளில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்துவிட்டு குளித்தால் சேற்றுப்புண் வராமல் இருக்கும்.பல வருடங்களாக சேற்றுப்புண் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.