டெய்லி ஒன் கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் நடக்கும் 10 பெரிய மாற்றங்கள்!!
புளிப்பு,இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த நெல்லிக்காய் எண்ணில் அடங்கா மருத்துவ குணங்களை கொண்டிருக்கின்றது.ஆயுளை கூடும் கனியாக நெல்லி உள்ளது.இந்த நெல்லிக்கனியில் வைட்டமின் ஏ,பி,சி,பொட்டாசியம்,கால்சியம்,மெக்னீசியம்,இரும்புச்சத்து, உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.நெல்லிக்காய் சாதம்,நெல்லிக்காய் ஊறுகாய்,நெல்லிக்காய் தொக்கு,நெல்லிக்காய் தேநீர்,நெல்லிக்காய் ஜூஸ் என்று பல வகைகளில் செய்து உண்ணப்படுகிறது.வயதான பின்னரும் இளமை தோற்றத்துடன் இருக்க தினமும் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காய் காய் மட்டுமல்ல அதன் இலை,பூ,பட்டை,வேர் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.இந்த நெல்லிக்காயில் என்பது சதவீதம் நீர்சத்து நிறைந்திருக்கிறது.
அது மட்டுமின்றி புரதச்சத்து,கொழுப்பு,நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் அதில் இருக்கின்றது.ஏழைகளின் அப்பிள் என்று அழைக்கப்படும் நெல்லிக்காயை ஜூஸாக செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட பலன்களை பெற முடியும்.
1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
2)இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்.இரத்த சோகை பாதிப்பு குணமாகும்
3)உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரையும்
4)இரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்
5)சரும சுருக்கம் நீங்கும்.சருமம் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்
6)முடி வளர்ச்சி அதிகமாகும்
7)கண் பார்வை தெளிவாகும்
8)உடல் எடை குறையும்