DMK BJP: கலைஞர் நூற்றாண்டு விழா மூலம் பாஜக மற்றும் திமுக ரகசிய கூட்டணி உறுதியாகியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மு க ஸ்டாலின் அதற்க்கு முற்றிலும் மறுப்பு தெரிவத்துள்ளார்.
சமீப காலமாக திமுகவும் நிலைப்பாடானது பாஜகவை அதிகளவு சார்ந்தே இருக்கிறது. எந்த அளவிற்கென்றால் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிலிருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் பாஜகவிலிருந்து கலந்துகொண்டது தான் தற்பொழுது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் முடிந்ததிலிருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையே மனக்கசப்பு இருந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் செல்வப் பெருந்தகை நாம் தனித்து நிற்க வேண்டுமென மேடை எங்கும் பேசி வருகிறார்.
இவரைத் தொடர்ந்து தோழமைக் கட்சிக்கு தோள் கொடுத்து பேசுவது போல திருமாவளவன் பேசினாலும் அவரது கருத்துக்கள் நேரடியாக திமுகவை தாக்குவது போல தான் உள்ளது. கட்டாயம் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் காங்கிரஸிலிருந்து ராகுல் காந்தி கலந்து கொள்ளாததற்கு இது மத்திய அரசின் விழா என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
எங்களுக்கும் பாஜகவிற்கிடையே எந்த ஒரு ரகசிய உறவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பும் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு சில செயல்பாடுகள் இவர் சொல்வதற்கு இணங்க இல்லை என்பது தெரிய வருகிறது. அத்திக்கடவு அவினாசி திட்டம் உஅடனடியாக் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு கூறியதையடுத்து பாஜக தனது போராட்டத்தை கைவிட்டது முதல் அனைத்தும் இவர்களின் கூட்டணியை உறுதி செய்வதை காட்டுகிறது.