டூத் பிரஷ் தேஞ்சு போகும் அளவிற்கு உபயோக்கிக்கும் நபரா நீங்கள்.. கட்டாயம் இதை தெரிந்துக்கொள்ளுங்கள்!!

0
102
Do you use the same toothbrush for months? Then you must know about this!!
Do you use the same toothbrush for months? Then you must know about this!!

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.நாம் உண்ணும் உணவுகளை அரைத்து உடலுக்குள் அனுப்பும் வேலையை பற்கள் செய்கின்றது.இதனால் பற்களை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது நம் கடமையாகும்.

ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் பற்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கின்றனர்.இதனால் பல் சொத்தை,வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல் நாம் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவசியம் மாற்ற வேண்டும்.ஆனால் சிலர் ஒருமுறை பிரஷ் வாங்கினால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.ஒரே பிரஷை பல மாதங்களுக்கு பயன்படுத்தி வந்தால் பாக்டீரியா தோற்று ஏற்படும்.

சேதமடைந்த பிரஷை பயன்படுத்தி பல் துலக்கினால் இரத்த கசிவு,ஈறு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.ஒரே பிரஷை நீண்ட நாட்களுக்கு பயன்படுவதால் பல் இடுக்குகளில் இருக்கின்ற அழுக்குகள் நீங்காமல் வாயில் துர்நாற்றம் ஏற்படும்.

சேதமடைந்த டூத் பிரஷை பயன்படுத்துவதால் பல் தேய்மானம் ஏற்பட்டு பற்கூச்ச பாதிப்பை சந்திக்க நேரிடும்.நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷ் பயன்படுத்தினால் அதில் இருக்கின்ற வைரஸ் மற்றும் கிருமிகள் வாய் மூலம் உடலுக்கு பரவி நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே குறைந்து 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

Previous articleநீங்கள் மறுபிறவி எடுத்துள்ளீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவை!! யாருக்கெல்லாம் மறுபிறவி கிடையாது தெரியுமா?
Next articleநிலப்பிரச்சனை தீர.. சொந்தமாக நிலம் வாங்க சிவனை இப்படி வழிபடுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!