கொரோனா பாதிப்பு உலகளவில் தீவிரமடைந்து வருவது கவலை அளிப்பதாக உலக சுகாதாரஅமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் கொரோனா குறித்து சில கருத்துக்களை செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.அதில், உலக அளவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸால் இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில், இது ஒருபுறமிருக்க இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவிலும், பிற உலக நாடுகளிலும் தற்போது அதிகரித்து வருகிறது. போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், மக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சில மாதங்கள் கிழக்காசியாவை மையமாகக் கொண்டிருந்தது.
தற்போது அதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய கண்டமும், தெற்காசிய நாடுகளும் தொடர்ந்து கொரோனா மையமாக இருந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா இவற்றையெல்லாம் முந்திவருகிறது. இப்படி கொரோனா பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது கவலை அளிப்பதாக உலக சுகாதார துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.