BJP Annamalai: பாஜக அண்ணாமலை விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா முடிந்ததை யொட்டி பாஜக மற்றும் திமுக நட்புறவு குறித்து பலரும் பேசி வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என தொடங்கி நாம் தமிழர் சீமான் வரை ஸ்டாலின் அணிந்திருந்த பேண்ட்டை சுட்டிக்காட்டி கூட இருவரும் கூட்டணியில் உள்ளது உறுதி என கூறுகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தரும் வகையில் அண்ணாமலை பதிலளித்திருந்தாலும் தற்பொழுது மீண்டும் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதில் திமுக, அதிமுக இவை இரண்டும் பங்காளி கட்சிகள். அவர்களுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. ஆனால் பாஜக தலைமையில், மாமன் மச்சான் போன்ற கூட்டணி அமைக்கப்படும்.
அந்த வகையில் பங்காளிகளுடன் ஒருபோதும் கூட்டணி என்ற பேச்சு இருக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேற்கொண்டு விஜய்யுடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, விஜய் மாமன் மச்சான் வரிசையில் தான் வருவார் அவருடன் கூட்டணி வைக்க சம்மதம் என்ற பாணியில் பதில் அளித்தார்.
ஒரீரு நாட்களில் விஜய் தனது கட்சிக் கொடி வெளியிட இருக்கும் நிலையில்கூட்டணி வைத்துக்கொள்ள அண்ணாமலை பச்சை கொடி காட்டியுள்ளார்.